Bahour Sivan Temple

India / Tamil Nadu / Gudalur / Villianur - Bahour Road [RC-18], 1

புதுச்சேரியின் தெற்கில் கடலூர் செல்லும் சாலையில் இருந்து பாகூர் பத்து கிமி தூரத்திலும், வில்லியனூர் ல் இருந்து நேர் தெற்கில் பதினாறு கிமி தூரத்திலும் உள்ளது பாகூர்.

இங்கு கிழக்கு நோக்கிய நான்கு தூண்கள் கொண்ட முகப்பு மண்டபத்துடன் கூடிய வாயிலுடன் உள்ளது கோயில். இக்கோயில் பல அரிதான அறியாத கல்வெட்டுக்கள் உள்ளன. அதனால் இகோயிலை மத்திய தொல்பொருள்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மேலும் இவ்வூர் முற்காலத்தில் கல்வெட்டுக்களில் வாகூர் என அழைக்கப்பட்டுள்ளது, "வாகூர் நாட்டு" என ஆரம்பிக்கிறது இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டிருதல் வேண்டும். கருவறை கோட்டங்களில் நர்த்தன விநாயகர், தென்முககடவுள், பிரம்மன், துர்க்கை என உள்ளன. பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன, அவற்றில் முக்கியமானதாக கருதப்படுபவை ராஷ்ட்ரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் கல்வெட்டுக்கள் ஆகும். பத்தாம் நூற்றாண்டில் சோழர்களி வென்றதன் காரணமாக இக்கோயிலுக்கு ஆடுகள் வழங்கியதையும் திருப்பணிக்கு கற்கள் வழங்கியதையும் குறிப்பிடுகின்றனர். ஆதித்யசோழன் காலத்தின் முன்னர் உள்ள கல்வெட்டுகளும் உள்ளன. சிறப்பாக இக்கோயிலில் இருந்து 1870 ஆம் ஆண்டு செப்பு பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன;அவை நிருபதுங்கவர்மனின் பட்டயம் ஆகும்.அதில் வாகூரில் உள்ள வித்தியாசாலையில் பயிலும் மாணவர்களுக்காக கிபி 877ல் மூன்று கிராமங்களின் (சேத்துப் பாக்கம், விளங்காட்டங் காடவனுர், இறைப்புனச்சேரி) வருவாயினை வழங்கி உள்ளார். மேலும் இவ்வூரில் மிக சிறப்பான கல்வி சாலை மைந்துள்ளது அதில் 14வகையான வேதங்கள் , இதிகாசங்கள், மீமிசை, புராணங்கள் ஆகியவற்றினை பயிற்றுவிக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோயிலின் பிரகாரத்தில் விநாயகர் கோயில், அடுத்து முருகன் ஆலயங்கள் உள்ளன.

கருவறையை ஒட்டி பெரிய ஆவுடையாருடன் விமோச்சனமுடையார் எனும் நாமத்துடன் ஒரு லிங்கம் நந்தியுடன் உள்ளது, வடபுறத்தில் திருசோபனமுடையார் எனும் லிங்கம் உள்ளது. கருவறை அர்த்த மண்டபத் தூண்களில் யாளி உருவங்கள் வித்தியாசமானவையாக உள்ளன.

இறைவன்-மூலனாதசுவாமி
இறைவி
Nearby cities:
Coordinates:   11°48'24"N   79°44'30"E
This article was last modified 9 years ago