ஸ்ரீஆட்சீஸ்வரர் ஆலயம்,அச்சிறுப்பாக்கம் (அச்சரபாக்கம்) | கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

India / Tamil Nadu / Maduranthakam / அச்சரபாக்கம்
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT29 - ஸ்ரீஇளங்கிளியம்மை எனும் பாலசுகாம்பிகா மற்றும் சுந்தரநாயகி சமேத ஸ்ரீஉமையாட்சீஸ்வரர் மற்றும் ஸ்ரீஎமையாட்சீஸ்வரர் ஆலயம்,அச்சிறுபாக்கம் 29வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.இரண்டு மூர்த்திகள் எனினும் உமையாட்சீஸ்வரர் கொடிமரத்துடன் பிரதானம்.தலவிநாயகர்: அச்சுமுறி விநாயகர்!விநாயகரை வணங்காது, திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது. இறைவன் இத்தலத்தில் விநாயகருக்கு அருள் புரிந்து, தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை) வென்றதாக வரலாறு.PT job/promotion - ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும்.PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம்,சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம்!
temple.dinamalar.com/New.php?id=66
shaivam.org/hindu-hub/temples/place/197/achirupakkam-pa...
ஆலயச்சிறப்பு:பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடுமிடத்தில் கீழே கிணறுள்ளதாம். கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாகப் பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.தான் வாளால் வெட்டிய குற்றம் நீங்க இறைவனுக்கு அரசன் ஒருவன் "திரிநேத்திரதாரி " முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.திரிநேத்திரதாரி திருவுருவம் பிரகாரத்தில் கொன்றையடி ஈசர் அருகில் உள்ளது.அச்சிறுத்த விநாயகர் காரியபலிதம் அருள்வதில் ஆகச்சிறந்த வரப்பிரசாதி.
அமைவிடம்:சென்னை - சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°24'3"N   79°49'3"E

கருத்துரைகள்

  •  96 கி.மீ
  •  447 கி.மீ
  •  567 கி.மீ
  •  634 கி.மீ
  •  685 கி.மீ
  •  699 கி.மீ
  •  716 கி.மீ
  •  990 கி.மீ
  •  998 கி.மீ
  •  1093 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago