மேல்மருவத்தூர் | கோவில், சிற்றூர்

India / Tamil Nadu / Maduranthakam /
 கோவில், சிற்றூர்
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

"மேல்மருவத்தூர் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோயில் நகரம். இந்நகரம், சென்னையில் இருந்து 92 கி. மீ. தொலைவில் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)இல் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. சென்னை, மற்ற ஊர்களுடன் சிறப்பான பேருந்து, தொடர்வண்டி இணைப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு ஆதிபராசக்தி கோயில் நிருவாகம் நடத்தும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
tawp.in/r/34c8"


"மேல்மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோவிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது.

இந்த வயல் பகுதியில் இங்கு வந்து இரவில் தங்கும் பக்தர்களின் வசதியைக் கருதி, ஒரு கீற்றுக்கொட்டகையாவது அமைக்க வேண்டும் என சில அன்பர்கள் விரும்பினர். ஆனால் அந்த இடத்தில் கொட்டகை அமைக்க அன்னையின் உத்தரவு கிடைக்கவில்லை.

மேலும் அந்த நிலத்தின் அடியில் பல சித்தர்கள் இருப்பதாகவும் பங்காரு அடிகளார் தெரிவித்தார். எனவேதான் இந்த கோவிலை `சித்தர்பீடம்' என்று அழைத்தனர்.

பெண்களுக்கு முக்கியத்துவம்::

பெண்கள் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் காட்சியை பிற கோவில்களில் காண முடியாது. மேலும் மாதவிலக்கு காலத்தில் அவர்கள் கோவிலுக்கு செல்வதும் இல்லை. மருவத்தூர் கோவிலில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. ஆண்டு தோறும் பெண்களே கோவில் விழாவை கொண்டாடுகின்றனர். கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். மாதவிலக்கு என்பது வழக்கமாக வரும் உபாதை என்பதால் அதுபற்றியும் பெரிதுபடுத்தி பேச வேண்டியதில்லை என்று பங்காரு அடிகளார் கூறியிருக்கிறார்...."
- www.maalaimalar.com/2011/03/03121824/melmaruvathur-adhi...
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  12°26'8"N   79°49'30"E
  •  92 கி.மீ
  •  443 கி.மீ
  •  563 கி.மீ
  •  630 கி.மீ
  •  682 கி.மீ
  •  696 கி.மீ
  •  712 கி.மீ
  •  987 கி.மீ
  •  994 கி.மீ
  •  1090 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago