Sree ThiruMoolaNathar Temple,Thalaikulam

India / Tamil Nadu / Bhuvanagiri / Maruthur road
 Shiva temple  Add category
 Upload a photo

தலைக்குளம் எனும் சிற்றூர், சேத்தியாதோப்பு- வடலூர் சாலையில் உள்ள பின்னலூரில் இருந்து கிழக்கு நோக்கி அம்பாபுரம் செல்லும் சாலையில் அம்பாபுரம் அடுத்து உள்ளது.

வள்ளலார் பிறந்த மருதூர் இந்த தலைக்குளம் அடுத்து உள்ளது. அதனால் இந்த ஊர் இறைவன் வள்ளலாரால் வணங்கப்பட்டவர் என கூறப்படுகிறார். இருநூறு ஆண்டு பழமை இருக்கலாம்.

கிழக்கு நோக்கிய சிறிய கோயில் ஆனால் நாட்டுகோட்டை செட்டியார்கள் திருப்பணி போல் கருங்கல் கொண்டு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது. மூங்கில், தேக்கு மரங்களின் இடையில் பழம்பெருமைகொண்டு நிற்கிறது. நாம் சென்றிருந்த காலை நேரம் கோயில் பூட்டியிருந்தது, பூசை செய்பவர் வீடு தேடி சென்று அழைத்து வந்தோம்.

ஒரு கால பூசை மட்டும் என்கின்றனர். எனினும் அந்த தொகை கூட சரிவர கிடைக்காமல் ஒரு முதியவர் இயன்ற பூசையினை செய்து வருகின்றார்.

அகண்ட முகப்பு மண்டபம்ஐந்து அடி உயரத்தில் உள்ளது.அதன் படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைகிறோம். அங்கு நேராக சிறு விநாயகரின் சிலை உள்ளது.அதன் முன் நந்தி மண்டபம் அதே உயரத்தில் கட்டப்பட்டு சிறு பாலம் போல் ஒரு கருங்கல் ஒன்று முகப்பு மண்டபத்துடன் இணைக்கிறது

முகப்பு மண்டபத்தின் மேல் இறைவன் இறைவி ரிஷப காட்சி தருகின்றனர். இருபுறமும் விநாயகர், முருகன் உள்ளனர்.
முகப்பு மண்டபம் தாண்டி உள்ளே நுழைந்தால் இறைவன் திருமூலநாதர் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக காட்சி தருகிறார். தென் புறம் நோக்கி இறைவி உமையபார்வதி.

இருபுறமும் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. சதுரமான மண்டபம் இறைவன் இறைவி இருவரையும் இணைக்கின்றன. கோயில் ஆங்காங்கே ஒட்டடையும் குப்பையும் சேர்ந்து காட்சியளிக்கிறது. எனினும் கோயில் மிக நேர்த்தியானது, விதானத்தில் பழமையான ஓவியங்கள் கதை சொல்கின்றன.

கருவறை கோட்டத்தில் தட்சணாமூர்த்தி மட்டும் கொள்ளை அழகுடன் காட்சி தருகிறார். வேறு கோட்ட தெய்வங்கள் இல்லை.
நவகிரகம், பிற தெய்வங்கள் ஏதும் இல்லை. சண்டேசர் உள்ளார்.



குடமுழுக்கு கண்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.

பராமரிப்பு, பூசை கரண்ட்பில் என கோயில் சிரமத்துடன், தனது நாட்களை நகர்த்திக்கொண்டு வருகிறது.

உடனடி பணியாக உழவார அன்பர்கள் குழுதூய்மை படுத்தும் பணியில் இறங்கினால் நல்லது.


மனம் கனக்க, கோயில் தாண்டி வெளியில் வரும்போது இடது தோளை யாரோ தொட்டது போல் உணர்ந்து திரும்பி கோயிலை மீண்டும் பார்க்கிறேன், ஓர் தேக்கு இலை தோள் தட்டி வீழ்ந்து கொண்டிருந்ததது.
Nearby cities:
Coordinates:   11°28'50"N   79°35'17"E
This article was last modified 2 years ago