Erappavur sivan temple

India / Tamil Nadu / Pennadam / Eraiyur road
 Shiva temple  Add category
 Upload a photo

பெண்ணாடம் தாண்டி இறையூரில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் ஏழு கிமி தூரம் சென்றால் எறப்பாவூர் அடையலாம். சாலை நன்றாகவே உள்ளது.

சிறிய ஊர்தான் இங்கு ஒரு சிவாலயமும்,வைணவ ஆலயமும் உள்ளன. சிவாலயம் ஊரின் வடபுறத்தில் தனித்து உள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோயிலை ஊர்மக்கள் சீர்திருத்தி 2014 ல் குடமுழுக்கு கண்டுள்ளனர்.

இறைவன் வரதமுடிஈஸ்வரர் கிழக்கு நோக்கிய ஆலயம் கொண்டுள்ளார். அம்பிகை வரதாம்பிகை தென்புறம் நோக்கிய கோயிலில் வீற்றிருக்கிறார். கருங்கல் கட்டுக்கல் எனப்படும் செதுக்கப்படாத கருங்கல் கொண்டு கோயிலை அமைத்துள்ளனர்.

லக்ஷ்மி கடாக்ஷம் அருள்வதால் லட்சுமி கணபதி என அழைக்கப்படுகிறார்.

இக்கோயிலையும் ஒரு வயதான பெண்மணியே பாதுகாத்து பூசிக்கிறார். பெயர் அலமேலு- 9524272396

ஒருகாலபூசைக்காக வரும் சொற்ப பணத்தினை கொண்டு கோயிலை நிர்வகிக்கிறார். அவ்வப்போது எண்ணை, பிற அபிஷேக பொருட்களுக்காக பிறர் உதவியை எதிர்பார்க்கிறார், அதனால் இங்கு அவரது எண் கொடுத்துள்ளேன். (அவசியம் ரெண்டுபெரும் வந்து காப்பி குடிச்சிட்டுத்தான் போகணும்னு சொன்னார், நீங்கள் அழைத்ததே போதும்என கோயிலுடன் திரும்பிவிட்டோம், இன்னும் மனிதம் கிராமங்களில் தான் வாழ்கிறது)

புராண கதைகளில்லை, சிற்ப்பங்கள் இல்லை, கம்பீரமான கோபுரங்கள் இல்லை, எனினும் மனதிற்கு இதமான அமைதியும், சுத்தமான கோயிலும் உள்ளது. வந்து நின்று நிதானமாய் இறைவனை தியானித்து செல்லலாம்.
Nearby cities:
Coordinates:   11°27'25"N   79°13'23"E
This article was last modified 8 years ago