Sathyavadi sivan temple (SATHIYAVADI) | Shiva temple

India / Tamil Nadu / Virudhachalam / SATHIYAVADI / SH 141 Thozhudur -Pennadam -Virudachalam, 1
 Shiva temple  Add category

கருவேப்பிலங்குறிச்சி-பெண்ணாடம் வழியில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது சத்தியவாதி கிராமம். தற்போது மருவி சத்தியவாடி எனப்படுகிறது. ஐந்து ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய பெரிய கோயில்,இவ்வட்டத்தில் விருதாசலத்திர்க்கு அடுத்து ஐந்து நிலை கோபுரம் உள்ள கோயிலாகும். ஒரே வளாகத்தில் இரு சிவன்கோயில்கள் உடையது. ஆலந்துறை ஈஸ்வரர் மற்றும் கைலாசநாதர்

மிகவும் பழுதடைந்திருந்த இக்கோயிலை இ.ச.அற.துறை புதுப்பித்து உள்ளது ஆயினும் கைலாசநாதர் கோயில் புதுப்பிக்கப்படாததால் குடமுழுக்கு தள்ளி போடப்பட்டுள்ளது. இறைவன், இறைவி, விநாயகர், முருகன் என அனைத்து சன்னதிகளும் கிழக்கு நோக்கி உள்ளன.முதன்மை கோபுரம் மட்டும் தென்புறம் நோக்கி உள்ளது. பெரிய வில்வ மரம் ஒன்றும் உள்ளது.

இறைவன்-ஆலந்துறை ஈஸ்வரர்
இறைவி-பொன்மணி அம்மன்
Nearby cities:
Coordinates:   11°27'18"N   79°18'27"E
This article was last modified 10 years ago