Kani Tribal Settlement - :காரையார் காணிக்குடி

India / Tamil Nadu / Vikramasingapuram /
 school, hostel, settlement, urban settlement or rural community

Kani is a tribe in Tamilnadu & Kerala, India
காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது.
இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இவர்களிடத்தில் கொக்கரை எனும் தனித்துவம் வாய்ந்த இசைக்கருவியும் உண்டு.
இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.
Nearby cities:
Coordinates:   8°39'36"N   77°20'8"E
This article was last modified 10 years ago