அத்ரிமலை - கடனா நதி - தோணியாறு - Thoni Falls - Athiri Hills

India / Tamil Nadu / Vikramasingapuram /

Kadana Nathi Dam - சிவசைலம் கடனா நதி அணை - Thoni Falls - Athiri Hills.
சிவசைலம் கடனா நதி அணை தென்காசி-அம்பசமுத்திரம் மெயின் ரோட்டில் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து சுமார் 8கி.மீ தூரத்தில் இருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது.
இந்த அணைக்கு தோணியாறு மற்றும் கல்லாறுகளில் இருந்து வரும் நீர்தான் கடனா அணையில் தேக்கப்படுகிறது.
தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் பனிஞ்சி என அழைக்கப்படும்.
கடனா அணைக்கு சற்று மேலே மலை உச்சியிலிருந்து வெள்ளிக் கோடாக ஒரு ஆறு விழுவதை நாம் பார்க்கலாம்.
இதனை தோணியாறு என் கிறார்கள்.
அது என்ன தோணியாறு?
ஆற்றைக் கடக்கப் பயன்படுகிறதே தோணி, அந்தத் தோணியின் உருவத்தில் இந்த ஆறு காட்சியளிக்கிறது.
அதனாலேயே இந்தப் பெயர்.
கடுமையான கோடை காலத்திலும் இந்த ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும்.
மலைக்கிடையில் பாய்ந்து வரும்போது அருவி போன்றே தோன்றுகிறது.
இந்த தோணியாறு எங்கிருந்து புறப்படுகிறது என்பது இன்றுவரை யாருக்கும் புரியாத ரகசியம்.
ஆனால், இந்த ஆறு, அத்ரி மகரிஷி உருவாக்கிய கருணை நதியில் வந்து கலக்கிறது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது.
அற்புதமாக அத்ரி ரிஷியால் உருவாக்கப்பட்ட கருணை என்னும் கடனா நதியில் தோணியாறு சேருகிறது என்பதே சிறப்பான விஷயம்தானே.
Nearby cities:
Coordinates:   8°46'45"N   77°17'14"E
This article was last modified 10 years ago