ஸ்ரீவல்லீஸ்வரர் ஆலயம், திருவலிதாயம்,பாடி (சென்னை)

India / Tamil Nadu / Ambattur / சென்னை
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT21 - ஸ்ரீஜெகதாம்பாள் சமேத ஸ்ரீவலிதாயநாதர் ஆலயம், திருவலிதாயம் எனும் பாடி 21வது தொண்டைநாட்டுத் தேவாரத்தலம்.விநாயகரின் திருநாமம் வரசித்தி விநாயகர்.NvPT Chennai - சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரக பரிகாரத் தலங்களுள் குரு பரிகாரத் தலம்,வியாழபகவானின் மகனான பரத்வாஜ முனிவர் கருங்குருவியாக வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு கருடனையே விரட்டும் வலிமை பெற்றதால் வலியன்குருவி என்று பெயர் கொண்டதோடு சாபமும் நீங்கப் பெற்றதால் இத்தலம் திருவலிதாயம் என்றும் இறைவன் வலிதாய நாதர் என்றும் அறியப்பட்டன.TPuT - திருப்புகழ் திருத்தலம்.PT Marriage - ஜாதகத்தில் திருமண தோஷங்களுக்குப் பரிகாரத் தலம், கமலி, வல்லி தேவியருடன் விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு நல்ல வரன் அமைய கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்கள்.PT Health - உடல் நோய்களைப் போக்கும் தலம், நோய்கள் அனைத்தையும் நீக்கும் அதியற்புதமான பதி,திருஞானசம்பந்தர் இங்கு 'நோய் தீர்க்கும் பதிகம்' பாடியுள்ளார்.உடல் வலிமை பெற, நோய்கள் தீர வணங்க வேண்டிய திருத்தலம்.
temple.dinamalar.com/New.php?id=13
shaivam.org/hindu-hub/temples/place/185/thiruvalithaaya...
ஆலயச் சிறப்பு: பரத்வாஜர் வணங்கிய லிங்கமும் உருவாக்கிய தீர்த்தமும் கோவிலின் உள்ளே உள்ளன. அம்பாள், சுவாமி சந்நிதிக்கு எதிரில் மேல் விதானத்தில் ராசிச் சக்கரம் அமைந்துள்ளது.
அமைவிடம்:சென்னையின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ள வல்லீஸ்வரர் ஆலயம் தேவார காலத்தில் திருவலிதாயம் என்று வழங்கப்பட்டது. சென்னை - ஆவடி சாலையில் பாடி டிவிஸ் லூகாஸ் பேருந்து நிறத்தத்தில் இறங்கி எதிரே உள்ள கிளைப் பாதையில் சென்று இக்கோவிலை அடையலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°5'50"N   80°11'13"E
  •  22 கி.மீ
  •  367 கி.மீ
  •  480 கி.மீ
  •  561 கி.மீ
  •  612 கி.மீ
  •  615 கி.மீ
  •  642 கி.மீ
  •  915 கி.மீ
  •  918 கி.மீ
  •  1007 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago