Sevveri sivan temple

India / Tamil Nadu / Pennadam / Thittakudi road
 temple, Shiva temple
 Upload a photo

செவ்வேரி

செம்பியன்மாதேவி ஏரிஎனும் சிறிய ஏரியின் கரையில் உள்ள இந்த ஊர் ஏரியின் பெயராலேயே அழைக்கப்பட்டுவந்துள்ளது, பின்னர் மருவி செவ்வேரி என தற்போது அழைக்கப்படுகிறது. திட்டகுடியின் நேர் வடக்கில் ஏழு கிமி தூரத்தில் உள்ளது இந்த சிறிய கிராமம்.

கோயில் பழமை முன்னூறு ஆண்டுகட்கும் மேல் பழமை வாய்ந்தது. திருப்பணியின்போது பல மாறுதல்கள் பெற்றிருக்கிறது முன்பு முகப்பு மண்டபத்திலிருந்த துவாரபாலகர்களும் அம்பிகை கோட்டத்து துவார பாலகிகளும் வெளியில் வைக்கப்பட்டுள்ளதை வைத்து யூகிக்கலாம். கருவறை யில் இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இவரின் எதிரில் கோபுர வாயில் உள்ளது.

என்ன காரணத்தினாலோ தென்மேற்கில் இருக்கவேண்டிய விநாயகர் இறைவன் அருகில் உள்ளார். இந்த விநாயகர் சற்று பெரிய உருவிலே இருக்கிறார். இறைவி சிவகாமசுந்தரி நடுத்தரமான உயரத்தில் காட்சிதருகிறார்.

கருவறை கோட்டத்தில் விநாயகர் தென்முகன் லிங்கோத்பவர், பிரமன் துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை பின்புறம் முருகன் சன்னதி வடபுறம் ஒரு கிணறும் சண்டேசர் சன்னதியும் உள்ளன.

வடகிழக்கில் நவகிரகங்கள், அம்பிகை கருவறை கோட்டத்து மாடங்களில் விநாயகர், கௌமாரி, வைஷ்ணவி மாகேஸ்வரி சிலைகள் உள்ளன.



கிராம சிவாலயம் செல்வோம், சிலர் பலராகும்போது பொருளாதாரம் மேம்படும், மேலும் அங்குள்ள மக்களுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
Nearby cities:
Coordinates:   11°27'58"N   79°7'58"E

Comments

This article was last modified 8 years ago