ரஞ்சன்குடி கோட்டை (துருவக்கோட்டை)

India / Tamil Nadu / Perambalur /
 வரலாற்று, தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதி, பலம்வாய்ந்த

பெரம்பலூரிலிருந்து 17 கி.மீட்டர் தொலைவில் திருச்சி, சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை.

இக்கோட்டையின் உள்ளே காணப்படும் பீரங்கி மேடை, வழிபாட்டு மண்டபம், வெடி மருந்து கிடங்கு, தண்டனைக் கிணறு இஸ்லாமியர் வழிபட மசூதி, நீச்சல் குளம் போன்றவற்றை காண சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவர்.

இக்கோட்டை செஞ்சி நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது.
--------------------------------------------------------
"... துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பகைவர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கோட்டையைச் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவர்களுடன் காட்சியளிக்கும் இந்தக் கோட்டை, செஞ்சி கோட்டையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கி.பி 1751-ல் பிரெஞ்சுகாரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியுற்றனர் என்பதும், ஜாகீர்தார்கள் இக் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் என்பதும், அதன்பிறகு கந்தாசாகிப் என்ற மன்னர் வசம் இக் கோட்டை இருந்ததும் படிப்படியாக கிடைத்த வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், இக் கோட்டையின் முழு வரலாறு இதுவரை கிடைக்கவில்லை.
தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீரங்கிக் குண்டுகள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன...."
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°20'52"N   78°56'22"E
  •  242 கி.மீ
  •  581 கி.மீ
  •  712 கி.மீ
  •  752 கி.மீ
  •  798 கி.மீ
  •  833 கி.மீ
  •  848 கி.மீ
  •  1103 கி.மீ
  •  1131 கி.மீ
  •  1244 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 12 years ago