Eduthtukatti Sivan Temple

India / Tamil Nadu / Tharangambadi / tharangampadi road
 temple, Shiva temple

மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் 25கிமி தூரத்தில் எடுத்துக்கட்டி என்ற ஊர் உள்ளது

இக்கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்து இருக்கும், இரண்டு கைகள் வெளியில் தெரியும், ஒரு லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்து காட்சியளிப்பார்.

பாசிகுல விநாயகரை பெருஞ்சாத்தன் (ஐயனார்) பாசிகுல விநாயகரை பூஜை செய்ததால் சாத்தனூர் என பெயர் பெற்றது.

அதோடு மட்டுமில்லாமல் எமனை சிவபெருமான் திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார். பூமாதேவி உடன் எழுந்து வந்து சிவபெருமானியிடம் உலகத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது, எனவே எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சொல்லி கேட்டுக்கொள்ள
எமனுக்கு உயிர்கொடுத்த இடம்தான் எடுத்துக்கட்டி.

தற்போது எடுத்துக்கட்டி சாத்தனூர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாசிகுல விநாயகர் கோயில் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது.
பாசிகுல விநாயகரை வழிபட்டால் வறுமை நீங்கும்.

சரி, நாம் சிவாலயம் வருவோம்

நான்கு ஏக்கர் பரப்புடைய பெரிய கோயில். முகப்பில் சுதை நுழைவாயில் உள்ளது அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம் நம்மை வரவேற்கிறது. அதன் எதிரில் எண்கோண வடிவில் உள்ள மண்டபத்தில் நந்தி உள்ளார் அதன் பின்னால் பலி பீடமும் உள்ளது.

முகமண்டபம் அர்த்தமண்டபம் என இரு மண்டபங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் உள்ளன. மண்டப முகப்பில் சிறு மாடத்தில் விநாயகன். வலது புறம் அழகிய வசந்த மண்டபம் தென் திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது.

கூம்பு வடிவ நீண்ட முக மண்டபம் அதில் வலது புறத்தில் அம்பிகை தெற்கு நோக்கி அருள் பாலிக்க,

இறைவனின் கருவறை வாயிலில் இரு அழகிய துவாரபாலகர்கள் திண்டி, முண்டி இருவரும் வரவேற்க்கின்றனர். உள்ளே இறைவன் கிழக்கு நோக்கி அழகிய அலங்காரத்துடன் வீற்றிருப்பதை காண முடிகிறது.

இறைவனது முக மண்டபத்தின் தென்புறம் ஒரு கருவறை மற்றும் ஒரு முகப்பு மண்டபம் உள்ளது அது முன்னர் தியாகராஜர் இருந்த மண்டபம் ஆகும் பாதுகாப்பு கருதி அவர் வேறிடம் சென்றுவிட்டார்.

பிரகாரத்தில் தென்முகன்,அவரது அருகில் உள்ள சுவற்றில் ஒரு மன்னன் மற்றும் அவரது துணைவியாருடன் லிங்க வழிபாடு செய்வதை காணமுடிகிறது ஆனால் அவரது பெயர் யாதென தெரியவில்லை. அருகில் கோட்டத்து விநாயகர்.

கருவறை பின்புறம் லிங்கோத்பவர் எனும் திருவிலங்க மூர்த்தி அழகாக செதுக்கப்பட்ட சிலையாக உள்ளதையும் அழகாக ஒரு தாழம்பூ வீழ்வதையும் காணலாம். கருவறை விமானம் முழுவது அழகிய சுதைகளால் நிறைந்து பல கதைகள் சொல்கின்றன.

விநாயகர் சிற்றாலயம் தென்மேற்கில் உள்ளது, அதில் நுழைந்து பார்ப்போம் வாருங்கள் அழகிய விநாயகரும் அவரின் எதிரில் ஒரு சிறிய லிங்கமும் உள்ளது. இது வேறெங்கும் காண இயலாத ஒன்று அல்லவா!!

அடுத்து ஆறுமுகன் பன்னிரு கைகளில் பத்து கரங்களில் ஆயுதம் தாங்கி சண்முகனாக காட்சியளிக்கிறார் அருகில் அவனது இரு அழகிய தேவியர்
அடுத்து கிழக்கில் வழி காட்டாமல் தென்புறம் வழி காட்டி நிற்கும் மகாலட்சுமி சிற்றாலயம்.

கோமுகம் தாண்டி சண்டேசர் சிற்றாலயம் அருகில் பெரிய மாதுளை மரம் ஒன்றுள்ளது.

வடகிழக்கில் ஒன்பது கோள்களின் தொகுப்பு பைரவர் சூரியன் உள்ளனர்.

மகாமண்டபத்தின் வடக்கு மூலையில் சனிபகவான் அற்புதமான அழகுடன் உள்ளதை நீங்களும் காண வேண்டாமா வாருங்கள் எடுத்துக்கட்டிக்கு......
Nearby cities:
Coordinates:   11°0'5"N   79°47'24"E

Comments

  • Sivan temple is very good
  • நமது ஆலயங்களைக் காப்பது நமது முக்கிய கடமை!
This article was last modified 9 years ago