கனிம வளம் மிகுந்த தேரிக் காடு / குதிரைமொழி தேரி

India / Tamil Nadu / Nazerath /
 காடு, desert (en), காணா நிலை

கனிம வளம் மிகுந்த தேரிக் காடு!!

1908 ஆம் ஆண்டு அரேபியாவில் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது. சாத்தான் குளத்தைப் போலவே அந்தக் கண்டுபிடிப்பை அம்மக்கள் முதலில் கண்டு கொள்ளவில்லைதான். 1930-களில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பெட்ரோல் கிணறுகளைத் தோண்ட படையெடுத்தபோது மக்கள் சுதாரித்துக் கொண்டார்கள்.....

ஆங்கிலேய அரசினருக்குக் கீழிருந்த "இந்திய நிலவியல் துறை"க்குத் தென்னிந்தியாவின் "தேரி"யிலும், கடற்கரைகளில் உள்ள "கருமணலிலும்" இல்மனைட், ரூட்டைல், மோனசைட் போன்ற "கனத்த" கனிமங்கள் இருப்பது தெரிந்துதான் இருந்தது. இருப்பினும் அன்றைய உலக சந்தையில் அவற்றிற்கு மதிப்பில்லை. எனவே இந்தக் கனிமங்களை வெள்ளையர்கள் கொள்ளையடிக்காமல் நம்மிடமே விட்டுச் சென்று விட்டார்கள்......
குட்டம், நவ்வலடி கடற்கரை மணலிலும், சாத்தான்குனத்தின் தேரிக் காட்டிலும் மேற்கூறிய கனிமங்கள் பெரிதளவில் உள்ளன என்பதை 1980-களில் இருந்து கல்லூரி ஆய்வாளர்கள் பலரால் செய்யப்பட்ட ஆய்வுகள் தெரிவித்தன.

சாத்தான் குளம்,குதிரைமொழி தேரி:
ஒரு டன் டைட்டானியம் உலோகத்தின் விலை 2005 ஆம் வருடத்தில் ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.4.5 லட்சம் வரை இருந்தது. ஆனால் 1981 ஆம் ஆண்டில் இதன் விலை டன்னுக்கு சுமார் 7 லட்சம் ரூபாயாக இருந்தது. இதற்குக் காரணம் அந்த வருடத்தில் அமெரிக்காவில் போர் விமானங்களும், சரக்கு விமானங்களும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதுதான்.

அடுத்த 20 வருடங்களில் எஃக்கிற்குப் பதிலாக அதைவிட எடை குறைந்ததும், உறுதி மிக்கதும், துருப்பிடிக்காத உலோகமான டைட்டானியமே கூடுதலாக உபயோகப் படுத்தப்படும் என்பது நிபுணர்களின் கருத்து. டைட்டானிய உலோகத்தின் விலை அடுத்த சில வருடங்களில் வெகு வேகமாகக் கூடும் என்பதுதான் உண்மை நிலை.
"டைட்டானியம் டை-ஆக்சைடுக்கான விலையை நாம் நமது கணக்கிடலில் டன் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் என்றே கருதியுள்ளோம். ஆனால் அதன் இன்றைய விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாகும். ஒவ்வொரு வருடமும் அது ஏறுமுகமாக இருக்கிறது.

ஒரு டன் டைட்டானியம் டை-ஆக்சைடுவின் விலை ரூ.1 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட வருடத்திற்கு 1 லட்சம் டன் டைட்டானியம் டை ஆக்சைடை டாட்டாவின் ஆலை உற்பத்தி செய்தால் அவருக்குக் கிடைக்கப்போகும் வருட வருமானம் ரூ.1000 கோடி ஆகும். அவர் போடப்போகும் முதலீட்டுப் பணமான ரூ.2500 கோடியை வெறும் இரண்டரை வருடங்களில் எடுத்து விடுவார். (இன்றைய விலையான ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை வைத்துப் பார்த்தால் அவரது முதலீடு 20 மாதங்களுக்குள்ளாகவே திரும்பி வந்துவிடும்!)
முதல் வருடத்திலேயே போட்ட மூலதனத்தை எடுத்து விட்டு அடுத்த 500 வருடங்களுக்கு...

தமிழினம் பற்றி அவர் அறியவில்லை!!
"அறிவே முதற்பொருள்! வயிறல்ல" என்பதை இரண்டாயிரம் வருடங்களாகக் கூறி வரும் இனம் இது!
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
"பட்டியல் 8: 9828.78 ஏக்கரில் இருந்து டைட்டானியம் டை- ஆக்சைடை உற்பத்தி செய்தால் கிடைக்கவிருக்கும் வருமானம்
மதிப்பு விலை
இல்மனைட் 2,85,035 - 5,99,556 கோடி ரூபாய்
ரூட்டைல் 36,366 - 67,819 கோடி ரூபாய்
ஜிர்கான் 9,829 - 12,777 கோடி ரூபாய்
மொத்த வருமானம் (சிலிமானைட்டை சேர்க்காமல்) 3,31,230 - 6,80,152 கோடி ரூபாய் = ரூ. 3 லட்சம் கோடி - ரூ.7 லட்சம் கோடி
பட்டியல் 8: டாட்டா டைட்டானியா திட்டத்தின் செலவு கணக்கு
முதலீடு ரூ.2,500 கோடி
இயக்கம் - நிர்வாக செலவு = டன் ஒன்றுக்கு 2.39 அமெரிக்க டாலர் = ரூ.97.751 = ரூ.98 ஏக்கருக்கு = ரூ.9,99,306 - ரூ.12,49,402 9828.78 ஏக்கருக்கு = 982,19,58,827 - 1228,00,97,390 = ரூ. 1230 கோடி
மொத்த செலவு (2500 + 1230) 3730 கோடி

பட்டியல் 9 : மொத்த லாபம்
பட்டியல் 9.1. டைட்டானியம் டை-ஆக்சைடை உற்பத்தி செய்யாமல் கனிமங்களை அப்படியே விற்கும்போது கிடைக்க வாய்ப்புள்ள லாபம்
வருமானம் சுமார் 50,000 கோடி ரூபாய்
செலவு சுமார் 1,500 கோடி ரூபாய்
லாபம் 48,500 கோடி ரூபாய்
பட்டியல் 9.2. டைட்டானியம் டை-ஆக்சைடை உற்பத்தி செய்து விற்கும்போது கிடைக்க வாய்ப்புள்ள லாபம்
வருமானம் சுமார் 5,00,000 கோடி ரூபாய் ( ஐந்து லட்சம் கோடி ரூபாய்)
செலவு 3730 கோடி ரூபாய்
லாபம் 4,96,270கோடி ரூபாய் (4.9 லட்சம் கோடி ரூபாய்)
ரத்தன் டாட்டாவின் திட்டம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°31'55"N   78°0'29"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 10 years ago