Kala Bairavar Shiva Temple (Melaammachathiram)
India /
Tamil Nadu /
Kumbakonam /
Melaammachathiram /
Kumbakonam- Aduthurai road
World
/ India
/ Tamil Nadu
/ Kumbakonam
World / India / Tamil Nadu / Thanjavur
temple, Shiva temple
கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் இரண்டு கிமி தொலைவில் உள்ளது அம்மாசத்திரம். தற்போது கும்பகோணத்தின் புறநகர் பகுதியாகி உள்ளது. இவ்வூருக்கு பைரவபுரம் என்றும் சக்குவாம்பாள்புரம் எனவும் பெயருண்டு
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
இந்தக் கோயிலுக்கு மராட்டிய மன்னர் சரபோஜி திருப்பணிகளை மேற்கொண்டுள்ளார். எனினும் இது காலத்தினால் பழமையானதாகும்.
சப்தரிஷிகளான காசிபர்,, அத்திரி, புலத்தியர், பிருகு, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகியோர் இத்திருத்தலத்தில் வழிபட்டதால் இத்தல சிவபெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு மேல அழகிய ருத்ராக்க பந்தல் உள்ளது.
காலபைரவர்
அசுரர்களின் தலைவனான இரண்யாட்சன் மகன் அந்தகாசுரனை வென்று, தேவர்களைக் காத்தருளிய சிவபெருமானின் அம்சமே காலபைரவமூர்த்தி என்று புராணங்கள் காலபைரவரைப் போற்றுகின்றன. பைரவர், ‘சங்கர ருத்திரர்’ என்றும் வணங்கப்படுவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆணவத்தை அழித்து, ஆன்மாவைக் கடைத்தேற்றும் மூர்த்தியே பைரவ மூர்த்தமாகும்.
சிவத்திலிருந்து தோன்றிய காரணத்தினால் பைரவர் சிவக்குமாரர் என்றும் வணங்கப்-படுகின்றார்.சிவபெருமானின் சக்தியின் வடிவமே பைரவர் என்றும், இவரது வாகனமாக வேதங்களே நாய் வடிவில் தரிசனம் அளிப்பதாகவும் சைவ சமய நூல்கள் தெரிவிக்கின்றன.
புண்ணியத் தலமான காசியை காலபைரவர் க்ஷேத்திரம் என்று புராணங்கள் கூறுகின்றன. காசியில் வாழ்பவர்கள், இறைவன் திருவடியை அடையும்போது அவர்கள் எமவாதம் இன்றி முக்தியடைகின்றனர் என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மையாகும். ஏனெனில், காசியை அதன் எட்டுத்திக்கிலும் எட்டுவிதமான பைரவர்கள் காத்து அருள்வதாக ஐதீகம். இதனால் காசி காலபைரவர் க்ஷேத்திரம் என்று வணங்கப்படுகின்றது. ‘‘காசிக்கு இணையான தலம் காசினி(பூமி)யில் இல்லை’’ என்ற முதுமொழிக்கும் இதுவே காரணமாகும்.
காசியைப் போலவே கோயில் நகரமான கும்பகோணத்தையும் எட்டு பைரவர்கள் காத்து அருள்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த வரிசையில் அம்மாசத்திரம் என்ற இத்தலத்தில் அருள்பாலிக்கும் காலபைரவர்,காசிக்கு இணையான பெருமையும் முக்கியத்துவமும் வாய்ந்த சக்தி வாய்ந்த மூர்த்தமாகும்.
பவிஷ்யோத்தர புராணம், காசியில் உள்ளோரின் பாவங்களையும் போக்கும் சக்தி கொண்டவராக இத்தல காலபைரவரைக் குறிப்பிடுகின்றது.
ஞானாம்பிகை அம்பாள் சந்நிதி மண்டப உட்புற விதானத்தில் 12 ராசிகள் அமைக்கப்பட்டு, நடுவில் பக்கத்திற்கு ஒன்பது கட்டம் என 81 கட்டங்களும், ஒவ்வோர் கட்டத்திலும் தமிழ் எண்கள் ஒன்றிலிருந்து ஒன்பது வரை பொறிக்கப்பட்டு, எவ்விதம் கூட்டினாலும் 45 என்ற எண் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. நவக்கிரகங்களின் சுழற்சியைக் குறிக்கும் விதமாக அமைந்த அரிய வடிவமைப்பு இந்த நவக்கிரகச் சக்கரம்.
கிழக்கு நோக்கிய இறைவன், தெற்கு நோக்கிய அம்பிகை . அம்பிகை சன்னதியின் எதிரில் பிரதான ராஜகோபுரம் உள்ளது கிழக்கில் சிறிய வாயில் மட்டும் உள்ளது, இறைவனின் எதிரில் கொடிமரம் உள்ளது.
இறைவன் அழகிய பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை அழகிய முகம் கொண்டு வருபவர்களை முதலில் பார்க்கும் வண்ணம் தெற்கு நோக்கிய வாயிலின் எதிரில் உள்ளார்.
பிரகாரத்தில் வடக்கு நோக்கிய சனி பகவான் உள்ளார். விநாயகர், நால்வர், சப்தரிஷிகள் உள்ளனர். கிழக்கு நோக்கியசன்னதிகளில் முருகன், அருகில் ஒரு லிங்கம் , கஜலட்சுமி, வாயு லிங்கம் ஆகியன உள்ளன.
கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், திருவிலங்கமூர்த்தி, நான்முகன், துர்கை, உள்ளனர். சண்டேசர் தனி கோயில் கொண்டுள்ளார்.
வடகிழக்கு மண்டபத்தில் சிறப்பான சன்னதியாக காலபைரவர் உள்ளார். அருகில் ஒரு லிங்கம், சூரியன் சந்திரன் ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் பைரவருக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.இவர் பிதுர் தோஷ நிவர்த்தி தரவல்லவர் ஆதலால் பிதுர் கடன் செய்ய தவறியவர்கள் இவரை வழிபாடு பலன் பெறலாம்.
இறைவன்- சப்தரிஷீஸ்வரர்
இறைவி- ஞானாம்பிகை
Place: Ammachatram is an ancient village mentioned as ‘Bairavapuram’ in ‘Bavishyotta puranam’ and later was called as ‘Sakkuvambalpuram’ or ‘Ammani Ammal Chatiram’ and presently as ‘Ammachatiram’.
Main deity: Saptharishiswarar with Ambal Gnanambikai
Sthala Vruksham: Vilva tree and Jackfruit tree
Legend: Saptharishsis prayed this Lord and they arranged the marriage for this Moolavar
Significances:
In Bavishyaotta Purana, this is a Kalabairavar sthalam and this place is mentioned as a Sin relieving place, as powerful as Kasi (Varanasi) because the Kalabairavar who is blessing here will give protection from all the eight directions. Worship here is considered to give the brilliance and stability to withstand the karmas in life.
The Full moon Ashtami pooja for Kalabairavar is very familiar for its great power of solving the problems and giving remedies to life.
Temple:
This 1500 Years old temple contains five Lingams (including moolavar), Vinayakar, Dhakshnamurthi, Murugan, Mahalakshmi, Lingothbavar, Vishnu, Durga, Chandikeshwarar, Kalabairavar, Saneeswarar, Suriyan, Chandiran, etc.
This is supposed to have an underground tunnel to Tanjore
Place marked by Raju's Temple Visits:
shanthiraju.wordpress.com/

Nearby cities:
Coordinates: 10°58'57"N 79°25'5"E
- sree kambaharEsvarar temple, thirubhuvanam 1.8 km
- sree nAgEswarar temple, thirunagEswaram 2.2 km
- sree sundharEswarar temple, karuppur, kumbakOnam 2.8 km
- sree mahAlingaswAmy temple, thiruvidaimarudhur 3.9 km
- sree naraiyoor nambi temple, nAchiyArkOil, thirunarayur, 7.8 km
- Airavateswarar Temple, Darasuram Temple ,showcase of southindian art on stone, thArAsuram, thaaraasuram, iravatheswarar, dharasuram 7.8 km
- sree dhEnueeswarar Temple, patteeswaram 10 km
- sree kapartheeswarar temple, thiruvalanchuzhi, 11 km
- Sree Swarnapureeswarar Temple, AndAn kOvil, kaduvAikaraiputhoor, 12 km
- sree panjavarnEswarar temple, thirunalloor, thirunallur 14 km
- pillaiyampettai 0.5 km
- SA PILLAYAMPETTAI, 100 1.3 km
- thepperumanallur mella theru 1.5 km
- Thirubuvanam Industrial Estate 1.5 km
- glaret nagar (the christ home0 2.3 km
- Thiruvasalur 2.5 km
- Thirungeswaram 2.8 km
- mantra veppathur 3 km
- marathi palace 4 km
- POUNDARIGAPUARAM PANCHAYET 4.7 km