Kavalakudi Sivan Temple | Shiva temple

India / Tamil Nadu / Kuttanallur / Thittani muttam road
 Shiva temple  Add category
 Upload a photo

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் காவாலக்குடி சிவன்கோயில்
கொரடாச்சேரியில் இருந்து கண்கொடுத்தவனிதம் வந்து பாண்டவையாற்றினை கடந்தால் திருப்பணிப்பேட்டை- காவலக்குடி அடையலாம்.

அக்காலத்தில் ஆற்றோரங்களில் உள்ள மதகுகளை காக்க, தேவையானபோது திறக்க, கிராம குளம் குட்டைகளில் நீர்க்ட்டி வைக்க இப்போது லஸ்கர் என்று சொல்கிறோமே அதுபோல் நீர்காவலர்கள் இருந்தனர். அப்படி நீர்காவலர் குடிகொண்டிருந்த ஆற்றோர கிராமம் தான் இப்போது காவலர் குடி ஆகி காவாலக்குடி ஆகியுள்ளது.

ஆற்றோரத்தில் கிழக்கு நோக்கிய சிவன்கோயில் , நாம் சென்றிருந்த நேரம் குடமுழுக்கிற்கு முதல் நாள் என்பதால் கடைசி நேர பரபரப்பு கோயிலெங்கும் காணப்பட்டது. இரண்டாம் கால பூஜை நடந்து கொண்டிருந்தது, நாமும் பூர்ணாகுதிக்கான திரவிய தட்டுக்களை ஏந்தி கோயிலை சுற்றிவரும் பாக்கியம் கிடைத்தது.

பல நூறாண்டுகள் பழமையான கோயில் பல முறை சிதைந்து பின்னர் புதுப்பித்து என இறைவன் கைலாசநாதர் பல திருப்பணிகளை பார்த்துவிட்டார். இதற்க்கு முன்னதான குடமுழுக்கு 17.3.1952 ஆண்டும், அடுத்ததாக 31.3.2004 அன்றும் நடைபெற்றது. இதோ நாளை 68 ஆண்டுகளின் முன்னர் குடமுழுக்கு செய்யப்பட 17.3.2019 அதே நாள் இறைவன் சிறிய லிங்கேஸ்வரராக பிரதிட்டை செய்யப்பட உள்ளார்.

கிழக்கு நோக்கிய கைலாசநாதர், தெற்கு நோக்கிய காமாட்சியம்மன், பின் புறம் பிரகாரத்தில் சிறிய விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் நவகிரகங்கள் பைரவர் சன்னதிகள் உள்ளன.

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.
www.facebook.com/vijay.kadambur/media_set?set=a.2586745...
Nearby cities:
Coordinates:   10°44'41"N   79°32'10"E
This article was last modified 7 years ago