Kamugakudi Sivan Temple

India / Pondicherry / Karaikal / Kamugakudi- nallathur road
 Shiva temple  Add category

கொல்லுமாங்குடி - காரைக்கால் சாலையிலுள்ள வேலங்குடி எனும் இடத்திலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் ஒரு கிமி தூரம் சென்றால் கமுககுடி அடையலாம்.

கமுகமரம் என்பது வழக்கமான பாக்கு மரங்களை குறிக்கும். பாக்கு மரங்கள் நிறைந்திருந்த ஊராதலால் இதன் பெயராலேயே இந்த ஊருக்கு கமுககுடி என பெயர். எனினும் தற்போது பாக்கு மரங்தோப்புகள் காணப்படவில்லை, வயல் வெளியாகவே இவ்வூர் உள்ளது.

இவ்வூரின் வடகிழக்கில் கிழக்கு நோக்கிய கோயிலாக சிவலோகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. முன்பு சிதிலமடைந்து காணப்பட்ட கோயில் தற்போது ஒற்றை கருவறை கொண்ட கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.

இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவனை ஒட்டி இறைவி தென் புறம் நோக்கியுள்ளார். கருவறை வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர்.

கோட்டத்து மாடங்களில் தென்முகன் மட்டும் உள்ளார். அருகில் கோட்டத்தில் இருந்த திருமால் சிலை உள்ளது, அதன் உயரத்தினை வைத்து பார்க்கும் போது முந்தைய கோயில் நல்ல பெரிய கோயிலாக இருந்திருக்கும் என அறியலாம். அவ்வாறே சண்டேசரும் பெரிய உருவுடன் உள்ளார்.

ஒரு கால பூஜை, பிற நேரங்களில் அருகாமையில் உள்ள மக்கள் விளகேற்றுகின்றனர்.

www.facebook.com/vijay.kadambur/media_set?set=a.2227293...
Nearby cities:
Coordinates:   10°59'1"N   79°44'42"E
This article was last modified 6 years ago