Mukunthanur sivan temple

India / Tamil Nadu / Peralam / Nallathur road
 Shiva temple  Add category

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், முகுந்தனூர் சிவன்கோயில்
கொல்லுமாங்குடி - காரைக்கால் சாலையில் 9 வது கிமி-ல் உள்ள வேலங்குடி எனும் இடத்தில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் அகரமுகுந்தனூர் வழியே நான்கு கிமி தூரம் பயணித்தால் முகுந்தனூர் அடையலாம்.

மழைக்காலங்களில் இந்த சாலை பயணிப்பதற்கு ஏற்றதல்ல.

முகுந்தன் என்பது திருமாலை குறிக்கும், முகுந்தன் என்ற வடமொழிப் பெயருக்கு வீடுபேறு கொடுப்பவன் என்று பொருள்.

இத்தல இறைவனை திருமால் வந்து பூசித்தமையால் இவ்வூருக்கு முகுந்தன் ஊர் என பெயர்.



ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள பெரிய வளாகம். அதில் கிழக்கு நோக்கிய சிவாலயம். இறைவன் கிழக்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர்.

இறைவன்- சுந்தரேஸ்வரர்
இறைவி- சம்பூர்ண சுந்தராம்பாள்

நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி, அம்பிகை நின்ற கோலம்.

கருவறை கொட்ட சன்னதிகளில் தென்முகன் மட்டும் உள்ளார், பிரகார கோயில்கள் ஏதுமில்லை, தென்புறம் ஒரு உடைந்த விநாயகர் உள்ளார். வடமேற்கில் ஒரு உடைந்த லிங்கமும் அதன் நந்தியும் வைக்கப்பட்டுள்ளன.

1994ல் குடமுழுக்கு கண்ட இக்கோயில் தற்போது முறையான பூசையின்றி உள்ளது. உழவார பணியும் தேவைப்படுகின்றது.
Nearby cities:
Coordinates:   10°59'38"N   79°44'28"E
This article was last modified 6 years ago