முனிவலம் சிவன் கோயில்

India / Tamil Nadu / Tharangambadi / sankaranpanthal Rd
 Shiva temple  Add category

மயிலாடுதுறை-செம்பனார்கோயில்- தரங்கம்பாடி சாலையில் சங்கரன்பந்தல் அடுத்து உள்ள ஊர் முனிவலம் என்பது. இவ்வூரை தாண்டி ஹரிஹரன் கூடல் எனும் பிரசித்தி பெற்ற ஊர் உள்ளது.

இங்கு கிழக்கு நோக்கிய சிவாலயம் உள்ளது. பத்து சென்ட் பரப்பிலான கோயில். இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இரு கருவரைகளியும் ஒரு நீண்ட மண்டபம் இணைக்கிறது.

இறைவன் கருவறை வாயிலில் ஒரு விநாயகர் உள்ளார். அருகில் ஒரு அரசகுமாரன் போன்ற ஒரு சிலை கை கூப்பியபடி உள்ளது யாரென தெரியவில்லை.

பிரகாரத்தில் இறைவனின் பின் புறம் தண்டாயுதபாணியாக முருகன் மேற்கு நோக்கி நின்றிருக்கிறார். அதனால் இக்கோயில் முருகனுக்கு சிறப்புடைய தலமாகும் என ஊகிக்க முடிகிறது.அடுத்து சண்டேசர் சன்னதி உள்ளது.

பிரகாரத்தில் வேறு சிற்றாலயங்கள் இல்லை சனி பகவான் மட்டும் வடகிழக்கில் உள்ளார்.
இறைவன் கைலாசநாதர்
இறைவி- கல்யாணி

கோயிலின் தென்புறம் பெரிய குளம் ஒன்று உள்ளது.
Nearby cities:
Coordinates:   11°0'36"N   79°46'3"E
This article was last modified 8 years ago