Malaikudi sivan temple & Pond

India / Tamil Nadu / Mayiladuthurai / Mangai nallur - thiruvilaiyattam road
 Shiva temple, pond

மங்கை நல்லூர் திருவிளையாட்டம் சாலையில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது மலைக்குடி கிராமம். பிரதான சாலையின் ஓரத்திலேயே கோயில் உள்ளது. முற்காலத்தில் பர்வதராஜன் பூசித்ததால் பர்வதராஜபுரம் என அழைக்கப்பட்டது, அதன் தமிழாக்கமாக தற்போது மலைக்குடி எனப்படுகிறது.

கிழக்கு நோக்கிய கோயில். ராஜகோபுரம் இல்லை. சிறிய நுழைவாயில் மட்டும் உள்ளது. கருவறை இடை நாழி மண்டபம், மகாமண்டபம் என உள்ளது மகாமண்டபம் இறைவன் இறைவி இருவரது சன்னதிகளையும் இணைக்கிறது.முற்றிலும் செங்கல் தளியாக அமைந்துள்ளது கோயில். மகாமண்டபத்தில் இறைவனை நோக்கி நந்தியும், மண்டபத்தின் வடகிழக்கில் பைரவர், சூரியன் உள்ளனர்.

மண்டபத்தில் வெளிப்புறம் இடதில் விநாயகரும், வலதில் முருகரும் சிறிய மாடத்தில் உள்ளனர். கருவறை கோட்டத்தில் அழகாய் சிரித்த முகத்துடன் தென்முகனும், லின்கோத்பவரும், நான்முகனும் உள்ளனர்.

இறைவன் பெரிய லிங்க உருவாக கம்பீரமாய் அமர்ந்துள்ளார். நான்கு அடிக்கு நான்கு அடி என்ற பெரிய சதுர ஆவுடையாருடன் வழுவழுப்பான பாணம் கொண்டு உள்ளார். அம்பிகையும் நான்கு அடி உயரத்தில் அழகிய வடிவமைப்புடன் காட்சிதருகிறார். பிரகாரத்தில் தனி தனி சிற்றாலயங்களில் விநாயகர், முருகன் வள்ளி தெய்வானையுடன், அடுத்து மகாலட்சுமி என் உள்ளனர். லட்சுமி இருக்கும் அதே சன்னதியில் ஒரு தனி லிங்கம் உள்ளது.
சண்டேசர் தனி கோயிலாக வடக்கில் உள்ளதையும் காணலாம்.

வடகிழக்கில் கிணறு ஒன்றும். மகாமண்டபத்தில் சனைச்சரன் கிழக்கு நோக்கியும் உள்ளனர்.

கிராம மக்கள் அதிகம் வருவதில்லை என்ற போதிலும் ஸ்ரீநிவாசன் என்ற சிறுவயது குருக்கள் தனது கடமையை செவ்வனே செய்து வருகின்றார். நான்காவது தலைமுறையாக இக்கோயில் தொண்டினை செய்து வரும் இவரை போன்றோர் கோயில் பணிகளை மென்மேலும் ஆர்வமுடன் செய்துவர நாமும் இது போன்ற கிராம சிவாலயங்களில் வழிபாடு செய்ய ஆரம்பிப்போம்.

இறைவன்- சோமசுந்தரேஸ்வரர் இறைவி- மீனாட்சி
Nearby cities:
Coordinates:   11°1'51"N   79°39'49"E
This article was last modified 8 years ago