Perunjeri sivan temple-2

India / Tamil Nadu / Mayiladuthurai / Mayiladuthurai- thiruvarur road
 Shiva temple  Add category

மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் மங்கைநல்லூர் நாற்சந்திக்கு அரை கிமி முன்னால் உள்ளது கிளியனூர் கைகாட்டி. அங்கிருந்து கிழக்கில் ஒரு கிமி தூரத்தில் உள்ளது பெருஞ்சேரி.

பெருஞ்சேரியில் இரு சிவாலயங்கள் உள்ளன. ஒன்று வாகீச்வரர் கோயில் மற்றொன்று கண் காணாதீஸ்வரர் கோயில்.

ஊரின் முகப்பிலேயே கிழக்கு நோக்கி உள்ளது இக்கோயில்.
சிறிய முப்பது சென்ட் பரப்பளவு கொண்ட கோயில் இது. இறைவன் காணாதீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பிகை கற்பகாம்பாள் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். பெருஞ்சேரி வாகீச்வரர் கோயிலின் பாலாலயக்கோயிலாக இது இருந்திருக்கலாம்.

பிரகாரத்தில் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் உள்ள ராசி மரங்களும் அதன் பெயர், நட்சத்திரத்தின் பெயர் ஆகியன எழுதப்பட்டுள்ளன.
பின் புறம் விநாயகர், முருகன், மகாலட்சுமி ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளன.
வடகிழக்கில் ஸ்வர்ண பைரவர் உள்ளது சிறப்பு.
Nearby cities:
Coordinates:   11°2'7"N   79°39'19"E
This article was last modified 9 years ago