Saththangudi sivan temple

India / Tamil Nadu / Sirkali / kurichi road, 1
 temple, Shiva temple

மணல்மேடு- பட்டவர்த்தி சாலையில் தலைஞாயிறு தாண்டி குறிச்சி செல்லும் சாலையில் விராலூர் தாண்டியதும் உள்ளது சாத்தங்குடி

புலவர்களுக்கு தானமளிக்க்ப்பட்ட ஊர் இந்த சாத்தங்குடி. இருநூறு வருடங்களாக பிராமணர் குடியிருப்பாக இருந்து தற்போது ஓரிரு குடும்பத்தினர் தவிர அனைவரும் வெளியேறிவிட ஓர் அற்புதமான கோயில் பழையபடி கல்லாய், மண்ணாய் மாற ஆரம்பிக்கிறது.

அதிட்டானம், பிரஸ்தரம் வரை கருங்கல் கட்டுமானம், அதன் மேல் துவிதள விமானம் கொண்டது இறைவனின் வீடு. அம்பிகையும் அவ்வாறே விமானம் மட்டும் வேசர வடிவம் கொண்டுள்ளது.ஆறுகால பூசைக்கும் கிராமத்தினை எழுப்பிக்களித்த கண்டாமணி ஊமையாகிப்போனது. நவீன பொழுதுபோக்கு சாதனங்கள் செய்த வித்தை இது.

மனம் படபடக்க கோயிலை சுற்றிவர ஆரம்பித்தேன், சருகுகள் காலடியில் நொறுங்கும் சப்தம் தவிர எங்கும் அமானுஷ்ய அமைதி.தென்முக கடவுள் மட்டுமே உள்ளார் அந்த பெரும் பிரகாரத்தில்....

இறைவன் விஸ்வநாதர் இடப்புறத்தில் இறைவி விசாலாட்சிக்கும்க்கும் சன்னதி, இருவரது கருவறைகளும் கிழக்கு நோக்கி உள்ளன. நடுவில் சண்டேசர் சிறு சன்னதியில்.



அம்பிகையின் எதிரில் திருமஞ்சன கிணறு நீர் இறைக்க தான் ஆளில்லை. இறைவனின் முன் மகா மண்டபம் உள்ளது விரிசல் விழுந்த கற்களை தாங்க மாட்டாமல் திணறுகின்றன தூண்கள். ஆங்காங்கே கருங்கற்கள் சிதறி கிடக்கின்றன

Who the person going to fix this Jigsaw puzzle?
Nearby cities:
Coordinates:   11°13'52"N   79°37'41"E
This article was last modified 8 years ago