ஸ்ரீசிவாநந்தீஸ்வரர் ஆலயம், திருக்கண்டலம், திருக்கள்ளில்

India / Tamil Nadu / Vellanur /
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

TNT18 - ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசிவாநந்தீசர் ஆலயம், திருக்கள்ளம் எனும் திருக்கள்ளில் 18வது தொண்டை நாட்டுத் தேவாரத்தலம்.கள்ளி ஸ்தல விருக்ஷம்,பிருகு முனிவர் கள்ளி மலர்களால் பூஜித்ததால் சுவாமிக்கு "திருக்கள்ளீஸ்வரர்' என்ற பெயரும், தலத்திற்கு "திருக்கள்ளில்' என்ற பெயரும் ஆனது.இத்தலத்தின் தல விநாயகர் திருநாமம் சுந்தர விநாயகர்.IKT ramayan -ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில், லவகுசர்கள் வணங்கிய கோவில்.குசன் பெயராலேயே ஆறு குசஸ்தலை என்று வழங்கப் படுகின்றது.PT Family integration - குடும்பத்தில் அமைதி/மகிழ்ச்சி நிலவ வணங்க வேண்டிய தலம்,இக்கோயிலில் சிவன், "சக்தி தெட்சிணாமூர்த்தி' யாக தனிச்சன்னதியில் இருக்கிறார்.இவர் இடது கைகளில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகு முனிவர் அவரை வணங்கியபடி இருக்கிறார்.PT Education/Knowledge - கல்விகலைகளில் சிறக்க வணங்க வேண்டிய தலம்,இத்தலத்தில் அக்ஷமாலையுடன் விளங்கும் முருகப் பெருமானை வணங்க கல்வி கேள்விகளில் சிறக்கலாம்.MDTA - ஸ்ரீஅகஸ்தியர் திருமணக்காட்சி கண்ட தலங்களுள் ஒன்று,எனவே திருமணப் பரிகாரத் தலமும் கூட. PT Lost assets - இழந்த சொத்துக்கள் திரும்பக் கிடைக்க வணங்க வேண்டிய தலம், திருஞானசம்பந்தர் காளஹஸ்தி செல்லும் வழியில் தனது விபூதிப்பை மற்றும் பூஜைப் பெட்டியை கொசஸ்தலை ஆற்றின் கரையில் வைத்துவிட்டு தீர்த்தமாடி விட்டு வந்து பார்க்கையில் காணாது தவிக்க, இறைவர் கள்ளிக்குள் வீற்றிருக்கும் தன்னை வந்து வணங்கும்படி உணர்த்த அவரும் அங்கு சென்று தனது பொருள்களையெல்லாம் திரும்பப் பெற்று பதிகம் பாடினார்.
ஆலயச் சிறப்பு:முருகப் பெருமான் தந்தையை சிஷ்யனாக்கிய தோஷம் நீங்க வணங்கிய தலம்.முருகப் பெருமான் தவக்கோலத்தில் அக்ஷமாலையுடன் காட்சி தருகிறார்.கோவில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைந்துள்ளது.
Location:சென்னை - பெரியபாளையம் பேருந்து சாலையில் கன்னிகைப்பேர்- லிருந்து 2 கி. மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். இத்தலம் வெங்கல் கிராமத்திற்கும் கன்னிகைப்பேருக்கும் இடையில் உள்ளது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°14'42"N   80°5'44"E
  •  5.6 கி.மீ
  •  351 கி.மீ
  •  469 கி.மீ
  •  543 கி.மீ
  •  597 கி.மீ
  •  603 கி.மீ
  •  625 கி.மீ
  •  900 கி.மீ
  •  900 கி.மீ
  •  999 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago