karuvazhakkarai-Marauthur sivan temple

India / Tamil Nadu / Mayiladuthurai / Myladuthurai-Poompuhar Road
 Shiva temple  Add category

மயிலாடுதுறை- பூம்புகார் சாலையில் உள்ளது கருவாழக்கரை பேரூந்து நிறுத்தம், கருவாழக்கரை ஊர் இரு புறமும் இருக்க நடுவில் உள்ளது மருதூர்.

இவ்வூரில் மேற்கு நோக்கிய இறைவனாக உள்ளார் மேற்கில் மொட்டை கோபுரம் உள்ளது, கிழக்கில் சிறு வாயில் உள்ளது ராஜராஜேஸ்வரர். மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது லட்சுமண பண்டிதர் என்பவரால் கட்டப்பட்டது இக்கோயில். அதனால் 400வருட பழமை வாய்ந்த கோயில் இது எனலாம். இக்கோயில் இறைவடிவங்கள் பாண்டிய நாட்டு பாணியில் உள்ளது. மராட்டிய மன்னர்கட்குபின் இக்கோயில் பூசை செய்த அந்தணர்கள் வசமே ஒப்படைக்கப்பட்டு விட்டது இன்று இதனை பரம்பரை அறங்காவலர்களால் பாதுகாக்கப்படுகிறது.
அழகிய நந்தவனங்கள் சூழ இறைவன் வீற்றிருக்கிறார். தற்போது சுவாமிநாதன் என்ற பரம்பரை நிர்வாகி நிர்வகிக்கிறார். இவர் வீடு கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ளது.
இறைவன்- ராஜராஜேஸ்வரர்
இறைவி- தேவநாயகி
Nearby cities:
Coordinates:   11°6'59"N   79°43'30"E
This article was last modified 9 years ago