Manakudi Sivan Temple (Mayiladuthurai)

India / Tamil Nadu / Mayiladuthurai / Myladuthurai-Poompuhar Road
 Shiva temple  Add category

மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் ஐந்தாவது கிமி ல் உள்ளது மணக்குடி எனும் சிறு கிராமம். இங்கு பிரதான சாலையின் வடக்கில் உள்ளது இக்கோயில். மேற்கு நோக்கிய கோயிலாக இருந்தாலும் கிழக்கிலும் ஒரு வாயில் உள்ளது. சுதை வளைவு கொண்ட மேற்கு வாயில் இக்கோயில் தருமபுர மடத்தின் கோயிலாகும்.
இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். சிறு இணைப்பு மண்டபம் இரு சந்நதிகளையும் இணைக்கிறது. விநாயகர், முருகன் மகாலெட்சுமி சன்னதிகள் கிழக்கு நோக்கிட தெற்கு நோக்கிய நடராஜர் இருப்பிடம் காலியாக உள்ளது. கருவறை கோட்டங்கள் இல்லை. பிரகார மதில் சுவர் இடிந்து சரிந்துள்ளது.இரண்டாம் பிரகாரமான நந்தவன சுற்று புதர்மண்டி கிடக்கிறது. குடமுழுக்கு கண்டு ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.
இறைவன்- சுந்தரேஸ்வரர்
இறைவி- சௌந்தரநாயகி
மயிலாடுதுறை அன்பர்கள் சதூர்த்தி, பிரதோஷம் போன்ற நிகழ்வுகளில் பெருமளவு கலந்து கொண்டு கோயிலுக்கு உயிரூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Nearby cities:
Coordinates:   11°6'42"N   79°40'42"E
This article was last modified 8 years ago