Seppakkam Gyanakootthar Mutt (Seppakkam)

India / Tamil Nadu / Pennadam / Seppakkam / National Highway 38
 mutt (Hinduism / Jainism)  Add category
 Upload a photo

சென்னை- திருச்சி NH45 சாலையில் உள்ளது வேப்பூர் குறுக்கு, இது விருத்தாசலத்தில் இருந்து மேற்கில் 20 கிமி தூரத்திலும், அதன் வடக்கில் ஆறு கிமி தூரத்தில் பிரதான சாலையிலேயே உள்ளது சேப்பாக்கம்.

சிவன்பாக்கம் என்பதே சேப்பாக்கம் ஆனது என்பர், இங்கு ஊரின் மத்தியில் உள்ளது துறையூர் ஆதீன இரண்டாம் பட்டம் ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிகர் அவர்கள் பரிபூரணம் ஆன இடம். இவர் முக்தியடைந்தது 1600ல்

இதனை பிற்கால ஆதீன முதல்வர்கள் அவர் முக்தியான இடத்தில் ஒரு லிங்கம் அமைத்து கோயில் எழுப்பி உள்ளனர். கிழக்கு நோக்கிய கருவறை அதில் ஓர் லிங்க மூர்த்தி ,எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. மற்றும் தெற்கு நோக்கிய நடராஜர் சிவகாமி திருமேனிகள் உள்ளன. கருவறை தென்மேற்கில் விநாயகர் உள்ளார். சண்டேசரும் உள்ளார்.

இவை தவிர வெளி பிரகாரத்தில் ஓர் விநாயகர் இருக்கிறார்

பழுதடைந்த இம்மடத்தினை 1942ல் சிதம்பர சிவப்பிரகாச தேசிகர் திருப்பணி செய்யமுயன்று முடிக்க இயலாமல் பின்னர் அவர் வழி வந்த சுப்ரமணிய சிவப்பிரகாச தேசிகர் செய்து முடித்துள்ளார்.

பின்னர் 70 ஆண்டு கடந்த நிலையில் புதுச்சேரி Saravanan & Brothers இதனை செப்பனிட்டு வருகின்றனர்.

வாருங்கள் அந்த முக்தி தலத்தினை தரிசிக்க..
Nearby cities:
Coordinates:   11°33'42"N   79°8'15"E
This article was last modified 7 years ago