sree AthimoolanAthar temple, parangipEttai (Parangipettai)

India / Tamil Nadu / Parangippettai / Parangipettai / SH 70
 temple, Shiva temple

SrPT - surya pooja temple ,soorya pooja performed during the mEsha month(chithirai) from 1-6 days.sree amirthavalli samEtha sree Athimoola nAthar temple.
சியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை நகரான பரங்கிப்பேட்டைக்குள் எனது இரும்புக்குதிரை பயணிக்க ஆரம்பித்தது, இவ்வூர் மஹ்மூதுபந்தர், போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்படுகிறது.

வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது. .

கி.பி. 1781ல் ஆங்கிலேயரை எதிர்த்து ஹைதர் அலி இரண்டாம் மைசூர் போர் புரிந்தார். அதன் நினைவு போர்கொடி கம்பமும், கல்லறைகளும் இன்றும் அழியாச் சின்னங்களாக உள்ளது. இங்கு கடல்சார் கல்வியான அண்ணாமலை பல்கலைகழகத்தினால் நிறுவப்பட்டு ஆராய்ச்சி படிப்புகள் நடைபெற்று வருகின்றது - இதின் கடல்சார் அருங்காட்சியகம் இங்கு பிரசித்தி பெற்றது.

சிதம்பரம் இங்கிருந்து 11 கி.மீ தூரத்திலும், கடலூர் 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.

நாயக்கர் காலத்தில் முத்துகிருஷ்ணபுரி என்றும் அழைக்கப்பட்ட இவ்வூருக்கு வருணபுரி என்ற பெயர் உண்டு. வருணம் என்றால் மழை. ஒவ்வொரு பருவமழைக்காலத்திலும் வட்டாரத்தில் அதிக அளவு மழையைப் பெறுகிற இவ்வூர்,

அருகிலுள்ள. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1781) மைசூர்வேங்கை ஹைதர் அலீக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே நடைபெற்ற போரில், ஹைதரை வீழ்த்தி வெள்ளையர் வலுவாகக் காலூன்றியதை ஞாபகப்படுத்தும் ஒரு ‘ஹைதர்’காலத்து நினைவுத்தூணும் இங்குண்டு.

அக்காலத்தில் ஒரு செழிப்பான துறைமுகமாகத் திகழ்ந்த இவ்வூர், சிறந்த வணிகத்தளமாகவும், தொழிற்மையமாகவும் விளங்கியிருக்கிறது. இவ்வூரின் இரும்பாலையிலிருந்து இரும்புகள் பிரிட்டனுக்கும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகியுள்ளன. மராட்டியப் படையெடுப்பால் இந்தத் துறைமுகம் அழிவுபட்டது. ஆற்காடு நவாப் அமைத்த தங்கச்சாலையில் செய்யப்பட்ட தங்கநாணயங்கள் ‘போர்ட்டோநோவோ பகோடா’ (Porto Novo Pagoda) என்றே அழைக்கப்பட்டன

சரி நாம் கோயிலுக்கு செல்வோம்

நமுசி எனும் பெரிய அரக்கனை அழிக்க இந்திரன் தனது வஜ்ஜிராயுததினை ஏவுகிறான். அது நமுசியின் தலைக்குள்ளே சென்று மறைகிறது செய்வதரியான்மல் திகைத்த இந்திரன் இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து, இறைவனை வழிபட்டு கடல் நீரின் நுரையால் அவன் அழிவான் என அறிந்து இப்பகுதி கடல் நீரின் நுரை கொண்டு அவனை அழிக்கிறான்.

மேலும் யானை ஒன்றினை காப்பாற்ற விஷ்ணு சக்கராயுதத்தை ஏவ அது முதலையை கொன்று பாதாள லோகம் சென்று மறைந்தது. இத்தல இறைவனை விஷ்ணு பூஜித்து மறுபடியும் இந்த சக்கராயுதத்தை வருண தீர்த்தத்தில் இருந்து பெற்றார் என்பது வருண மகாத்மியம் எனும் நூலில் இருந்து அறிகிறோம்.

மன்தேகம்தீவு தமித்தியர் சூரியனை மறைக்க ஒளிமழுங்கிய சூரியன் தனது மகன் சாவன்னியை அழைத்து வருநாபுரி இறைவனை அமுத சரசு தீர்த்ததினால் அபிஷேகம் செய்து வணங்கி அந்த அரக்கர்களை வெல்ல வைத்த தலம் இது.

இதனால் சூரியன் சித்திரை முதல் ஆறு நாட்கள் காலை இறைவனை வணங்கும் அற்புதத்தினை காண வாருங்கள்

இந்த கோயில் இருப்பது B.முட்லூர்- பரங்கிப்பேட்டை சாலையில் பரங்கிப்பேட்டைக்கு சற்று முன்னதாக அகரம் எனும் ஊரில் உள்ளது.

மூன்று நிலை முதன்மை கோபுரம் தாண்டினால் இரண்டு ஏக்கர் பரப்பு கொண்ட பெரிய கோயில், முகப்பு மண்டபம் அர்த்தமண்டபம் என இரு மண்டபங்கள் கருவறையின் முன் உள்ளது. முகப்பு மண்டபத்தின் முன் கொடிமரம் கொடிமரவினாயகர், நந்தி உள்ளது. முகப்பு மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் சனி பகவான் கிழக்கு நோக்கி இருக்கிறார்.

கருவறையில் இறைவன் ஆதிமூலநாதர் பெரிய உருவில் கம்பீரமாக கிழக்கு நோக்கி உள்ளார். கருவறை வாயிலில் சித்தி விநாயகர், பாலசண்முகர் உள்ளனர். முகப்பு மண்டபத்தில் நடராஜர் தெற்கு நோக்கி உள்ளதை காணலாம். கருவறை அருகில் பெரியான் செட்டியார் சிலை உள்ளதை காணலாம் இவதான் இக்கோயிலை பெரிய அளவில் விரிவு படுத்தி கட்டிவவர்.

வெளி பிரகாரத்தில் தென்புறம் அகன்ற கொலு மண்டபம் அதில் ஒரு புறம் நீலகண்டர் எனும் சிறிய லிங்கமும் நீலாயதாட்சிஎனும் அம்பிகையும் உள்ளனர். அருகில் ஆதி கணேசர் உள்ளார். கோயில் பிரகாரத்தின் நான்கு புறமும் திருமாளிகை சுற்று உள்ளது அதில் தென்மேற்கில் ராமலிங்கர் எனும் லிங்கமும் வடமேற்கில் காசிவிஸ்வநாதர், கஜலட்சுமி உள்ளனர்.
கருவறை நேர் பின்னால் முருகன் சிற்றாலயம் உள்ளது. வடக்கில் சண்டேசர், துர்க்கை சன்னதியும், பெரிய வில்வமரத்தின் கீழ் சில நாகர்களும் உள்ளதை காணலாம். வடக்கில் அதாவது இறைவனின் இடபாகத்தில் அம்பிகை ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது அதில் அம்பிகை அமிர்தவல்லி பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார்.

வடகிழக்கு மூலையில் சித்ரகுப்தன் மற்றும் நாகர்கள் தெற்கு நோக்கி உள்ளனர், மேற்கு நோக்கி ஆதிபைரவர், காலபைரவர், சூரியன் ஒன்பது கோள்கள் தொகுப்பு
விஷ்ணு சக்கரம் பெற்ற சக்கர தீர்த்தம் வடக்கில் உள்ளது
This is a very ancient siva temple worshiped by suryan, varunan and chitthiraguptar.So the place along the temple is called as Thiruvaruna maanmiyam.One of the temples in tamilnadu which was built as sun rays falls on swami and Ambal at specific days (chittirai first week)
Nearby cities:
Coordinates:   11°28'58"N   79°44'47"E
This article was last modified 7 years ago