Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

Nellikuppam Kailasanathar temple

India / Tamil Nadu / Nellikkuppam / vanpakkam road, 1

கடலூர்-பண்ருட்டி சாலையில் உள்ளது நெல்லிக்குப்பம். பிரதான சாலையில் பேரூந்து நிலையம் அடுத்து மூன்றாவது வலது புற சாலையில் சென்றால் ஒரு வைணவ கோயிலை தாண்டி ஊரின் வடகிழக்கில் உள்ளார் கைலாசநாதர்.

1400ஆண்டுகள் பழமை வாய்ந்தது என சொல்லப்பட்டாலும் இக்கோயில் பல்லவர்கள் காலத்தியது என சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. இக்கோயில் பல்லவர், சோழர், நாயக்கர் என பலராலும் பொலிவூட்டப்பட்டிருக்கிறது. இவ்வூர் ஒரு சிறு நகரமாகவே பல காலம் இருந்துள்ளது. இருப்பினும் கடந்த நூறாண்டுகளில் இக்கோயில் கைவிடப்பட்டதன் காரணம் தெரியவில்லை,மிகவும் சிதிலமாகி வழிபாடிழந்து இருந்த இக்கோயிலை தற்போது முழுமையாக புனர்நிர்மாணம் செய்து வருகின்றனர்.

முதலில் கோயிலின் வரலாற்றினை பார்த்துவிட்டு ஆலயம் வலம் வருவோம் வாருங்கள். இக்கோயில் முதலாம் மகேந்திர வர்மானால் 600-6030 AD கட்டப்பட்டுள்ளதாக சில கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திருநாவுக்கரசரால் மகேந்திர வர்மன் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டதும் திருவதிகை,நெல்லிக்குப்பம், திருபாதிரிபுலியூர் எனும் மூன்று கோயில்கள் நிர்மாணிக்கிறான். இவ்வூர்கள் ஏற்கெனவே சமண ஊர்களாக இருந்துள்ளன அவர்களை வெளியேற்றி பின்னர் இக்கோயில்கள் இவ்வூரில் கட்டப்பட்டிருத்தல் வேண்டும். இம்மூன்று கோயில்களிலும் புத்தர் சிலைகள் உள்ளன.
1130இன் விக்கிரமசோழனின் கல்வெட்டு இக்கோயிலில் உள்ளது. அவை இக்கோயில் ராஜேந்திரன் காலத்தில் திருப்பணி பெற்றது என்றும் கயிலேச்வரமான ராஜெந்திரசொழேசுரம் என கூறுகிறது மேலும் இவ்வூரை ராஜராஜ வள நாட்டு சோழவல்லி என கூறுகிறது. இக்கோயிலுக்கு அண்மையில் சோழவல்லி எனும் ஊர் உள்ளது.17ஆம் நூற்றாண்டில் இரண்டாயிரம் முதலிகள் இக்கோயிலை புதுப்பித்தனர் என கூறுகிறது. இக்கோயிலில் பத்து சோழர் கல்வெட்டுகளும், மூன்று பிற கல்வெட்டுக்களும்,ஒரு நாயக்கர் கல்வெட்டும் உள்ளன. குந்தவை நாச்சியார் கொடுத்த கொடை பற்றி ஒரு கல்வெட்டு கூறுகிறது.

இக்கோயில் கிழக்கு நோக்கி இருந்தாலும் கிழக்கில் வாயிலுக்கு நேர் எதிர் பார்வை தெரு ஆக்கிரமிப்பில் உள்ளது. தென் புறமே பிரதான வாயிலாக உள்ளது.

தென்மேற்கு சிற்றாலயத்தில் விநாயகர் வரவேற்கிறார், அடுத்து வடக்கு நோக்கிய உயர்ந்த மாடகோயிலில் ஒரு லிங்கமூர்த்தி இருந்துள்ளார் ஆனால் இப்போது வெற்றிடமாக உள்ளது, அடுத்து பாலதண்டாயுதபாணியாக தெற்கு நோக்கியும் அதே கருவறையில் கிழக்கு நோக்கி முருகன் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.அருகில் பெரிய வன்னி மரத்தடியில் ஒரு செல்லகுட்டிபோல ஒரு சிறு லிங்கம்.(யாரோ வெளியிலிருந்து கொண்டுவந்து வைத்துள்ளனர்)

துர்க்கை, மாடம் காலியாக உள்ளது, சண்டேசர் பழமையான பல்லவர் கால படைப்பு அடுத்து வெட்டவெளியில் மூத்த தேவி எனப்படும் ஜேஷ்ட்டா தேவி.

இறைவன் அழகிய வழுவழுப்பான மேனி கொண்ட அழகு திருமேனி, கைலாயவாசியல்லவா!!

இரு புறமும் விநாயகர் மற்றும் பெரிய முருகன் சிலை உள்ளது. அம்பிகை அழகிய வடிவுடன்,இறைவனின் இடப்புறம் தெற்கு நோக்கி உள்ளார் ஆனால் அவரது மண்டபம் இறைவனை முன்புற வாயில் வழி பார்ப்பதை தடுத்தவாறு உள்ளது ஒருவேளை இதுபோன்ற முறையற்ற கட்டுமானங்கள் தான் கருவறையின் சக்தி அலையை தடுத்து கோயிலையே விளங்காமல் போக செய்துவிடுகின்றன போலும் திருப்பணி செய்வோர் இதற்க்கு தகுந்த ஏற்ப்பாடு செய்தல் நலம்.

நவகிரகங்கள் வரிசையாய் வடக்கு நோக்கியவாறு ஒரே கோட்டில் உள்ளன. அருகில் பிற கோட்ட தெய்வங்களும் இருப்பதால் பாதுகாப்பு கருதி ஒரே வரிசையில் வைத்துள்ளனர் என அறியமுடிகிறது.
இந்த வரிசையின் எதிரில் ஒரு தூணின் பின்புறம் புத்தர் சிலை உள்ளதை காணலாம்.

இக்கோயில் கைலாசம் என்றும், வெள்ளபாக்கம் கோயில் சிவலோகம் என்றும், நெல்லிக்குப்பம் பிரதான சாலையில் உள்ளது பூலோகம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆதலால் நீங்கள் பூலோகம், சிவலோகம், கடைசியில் இந்த கைலாசத்தினையும் தரிசியுங்கள்

இறைவன்- கைலாசநாதர்
இறைவி- அகிலாண்டேஸ்வரி
Nearby cities:
Coordinates:   11°46'52"N   79°40'24"E

Comments

  • nelliloganathan
    cholar magal valli vandu vanagya kovil,so this area named as sola valli
This article was last modified 9 years ago