Eluthur sivan temple

India / Tamil Nadu / Pennadam / National Highway 38
 temple, Shiva temple
 Upload a photo

சென்னை- திருச்சி சாலையில் உள்ள ராமநத்தம்(தொழுதூர்) அருகில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது இந்த எழுத்தூர், எலுத்தூர் எனவும் அழைக்கப்படுகிறது.

ஊர் பெயர் காரணம் தெரியவில்லை, சற்று பெரிய கிராமம், பெரிய ஏரியின் கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. மேல்நிலை பள்ளியும் உள்ளது, இதனை ஒட்டியே சிவன்கோயில் உள்ளது.

கிழக்கு நோக்கிய சிவாலயம், பழைய சிவாலயத்தினை பிரித்து திருப்பணி செய்துள்ளனர். முன்பும் இருந்த மகாமண்டபம் முழுமையாக அகற்றப்பட்டு பணிகள் செய்துள்ளனர்.

கருவறை வாயிலில் பெரிய விநாயகர் உள்ளார். இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி இறைவனுக்கு இடப்புறம் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார்.

விநாயகர் தனி கோயிலில் தென் மேற்கில் உள்ளார்.நவகிரகங்கள் வடகிழக்கில் உள்ளன, அதில் செவ்வாயை பாருங்கள் மீசையுடன் உள்ளது.

பைரவர் சற்று பெரிய உருவில் தனி சிற்றாலயத்தில் உள்ளார்.

இறைவன்- அண்ணாமலையார் இறைவி- உண்ணாமுலையம்மன்
Nearby cities:
Coordinates:   11°26'20"N   79°0'47"E
This article was last modified 7 years ago