Wikimapia is a multilingual open-content collaborative map, where anyone can create place tags and share their knowledge.

sree sathyavAkeeswarar temple, anbil, (Thiru Anbil, திரு அன்பில் Tirumaalayantur)

India / Tamil Nadu / Lalgudi / Thiru Anbil, திரு அன்பில் Tirumaalayantur / Lalgudi- thirumanur road
 temple, Shiva temple, thevara paadal petra sthalam

NCN057 - anbilAnthurai is 57th thEvAra Temple of ChOzha dhEsh(Naadu)located in north shore of river Cauveri. thEvAra name of this temple is Alanthurai. sree sathiyavAkeeswarar along with sree sountharanAyaki temple, Alandhurai.

Route: Near to lAlkudi, thiruchi.Anbil divya dEsam temple is very near.

அன்பிலாலந்துறை (கீழ்அன்பில், அன்பில், அம்பில்).அன்பில் என்பது ஊரின் பெயர் ஆலந்துறை என்பது கோயிலின் பெயர்.
இறைவன்-: சத்தியவாகீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறையார்.
இறைவி - சௌந்தரநாயகி.
தல மரம் : ஆலமரம்.
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்.

இக்கோயில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு முன்பு மாடக் கோயிலாக இருந்ததாம்.பராந்தகசோழன் குடியேற்றிய நூற்றெட்டு அக்னிஹோத்திரிகளின், ஜைமினி சாமவேத பாராணயத்தை இத்தல விநாயகர், செவி சாய்த்து கேட்டதால் 'சாமகானம் கேட்ட விநாயகர் ' என்றும் வழங்கப்படுகிறார்.
இங்குள்ள விநாயகர் "செவிசாய்த்த விநாயகர்" என்றழைக்கப்படுகிறார். கொள்ளிடத் தென்கரையில் நின்று பாடிய சம்பந்தரின் பாடல்களைச் செவிசாய்த்து கேட்டமையின், இவ்விநாயகர் இப்பெயர் பெற்றார்.
ஐந்து நிலை முதன்மை கோபுரமும், அடுத்து ஓர் கட்டை கோபுரமும் உள்ளது. இறைவன் இறைவி இருவரும் கிழக்கு நோக்கி உள்ளனர். பிரகாரத்தின் மேற்கில் விநாயகர், முருகன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, உள்ளனர். பைரவர் தெற்கு நோக்கி உள்ளார்.
சூரியன் சந்திரன், சனி ஆகியோரும் உள்ளனர். இறைவன் சதுர பீடம் உடையவர். கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன், உமையொருபாகன். நான்முகன், துர்க்கை உள்ளனர். கருவறை சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது.கருவறை சுவர்களில் சத்தியலோகவாசியாகிய பிரமனும், வாகீசரும் பூசித்தமை செதுக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தைப்பற்றியனவாக 1902 - இல் படியெடுக்கப் பட்டவை பதின்மூன்று கல்வெட்டுக்களும், 1938 - இல் எடுக்கப் பட்டவை ஆறும் உள்ளன.அவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் திருமால் கோயிலில் உள்ளவை. ஏனையவை சத்தியவாகீசரைப் பற்றியன. கல்வெட்டுகளில் இறைவன்பெயர் பிரமபுரீசுவரர் என வழங்கப் பெறுகிறது. மாறவர்மன் குலசேகரபாண்டியன், மூன்றாம் இராஜேந்திர சோழன், ஹொய்சள வீரராமநாததேவர், மதுரைகொண்ட பரகேசரி வர்மன், இராஜராஜதேவன் முதலியவர்கள் காலத்தனவாகக் காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் நிபந்தம் அளிக்கப்பெற்றமையை அறிவிக்கின்றன

இக் கோயிலின் தெற்கில் சத்தியவாகீச விநாயகர் கோயில் உள்ளது இங்குள்ள ஆலமரத்தில் மேற்பகுதி விநாயகர் போல் உள்ளது சிறப்பு. இவ்வூரில் மங்களாசாசனம் பெற்ற வைணவ கோயிலும், சமயபுர மாரியம்மனின் சகோதரி எனப்படும் மாரியம்மன் கோயிலும் உள்ளது.
Nearby cities:
Coordinates:   10°51'56"N   78°53'11"E
This article was last modified 8 years ago