Chatram Puliangulam kanmai

India / Tamil Nadu / Kariapatti /
 Upload a photo

சத்திரம் புளியங்குளம் என்ற ஒரு அழகான கிராமம் காரியாபட்டியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமம் காரியாபட்டி-நரிக்குடி சாலையில் இருந்து 2KM தொலைவில் உள்ளது. சத்திரம் புளியங்குளம் விலக்கில் இருந்து ஊருக்கு செல்லும் சாலையின் ஒரு புறம் புளியமரங்கள் பல காணலாம். இந்த ஊரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் பல நூற்றாண்டுகளாக மாமா, மச்சான், பெரியப்பா, சித்தப்பா போன்ற முறைகளுடன் பழகி வருகின்றனர். இந்து-இஸ்லாம் ஒற்றுமைக்கு இந்த ஊர் ஒரு முன்னுதாரணம். இந்த ஊரில் அய்யனார் சுவாமிகள் கோவில், சோனையா சுவாமிகள் கோவில், அருள்மிகு அழகு நாச்சியார் அம்மன் கோவில், விநாயகர் கோவில், பெருமாள் கோவில் மற்றும் சங்கையா சுவாமிகள் கோவில் இருக்கின்றது. இஸ்லாமியர்களின் பள்ளிவாசலும் இங்கு உள்ளது. இந்த ஊரின் பிரதான தொழில் விவசாயம்.இப்படிக்கு இரமேஷ், சத்திரம் புளியங்குளம்.
Nearby cities:
Coordinates:   9°39'33"N   78°8'55"E
This article was last modified 3 years ago