பழனி ரயில் நிலையம் (பழனி)

India / Tamil Nadu / Palani / பழனி / Railway Feeder Road (R.F.Road)
 தொடர்வண்டி துறை, தொடர்வண்டி நிலையம், railway junction (en)

திங்கட்கிழமை, 25, மே 2009 (22:11 IST)

காந்தி, நேரு பயணம் செய்த ரயில் ஓய்வு பெற்றது
-----------------------------------------------
திண்டுக்கல்-பாலக்காடு இடையில் சுமார் 180 கி.மீ நீளம் உள்ள மீட்டர்கேஜ் ரயில் பாதை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1933-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த மீட்டர் கேஜ் ரயில்பாதை தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் பாதையாக விளங்கி வந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து மீட்டர்கேஜ் ரயில் பாதைகளும் அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதன்படி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு பிறகு இந்த ரெயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற இந்திய ரெயில்வேத்துறை நடவடிக்கை எடுத்தது.

திண்டுக்கல்- போத்தனூர் இடையில் அகல ரெயில் பாதை அமைக்கும் பண்கள் தொடங்க உள்ளதால் இன்றுடன் இப்பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 75 ஆண்டுகளாக பவனி வந்த திண்டுக்கல்-போத்தனூர் ரெயில் இன்றுடன் விடை பெற்றது.

இன்று இரவு 9.45 மணிக்கு பழனி ரயில் நிலையம் வழியாக திண்டுக்கல் சென்ற ரயில்தான் இப்பாதையில் சென்ற கடைசி ரயில். (திங்கட்கிழமை, 25, மே 2009)
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°27'30"N   77°31'12"E
  •  74 கி.மீ
  •  103 கி.மீ
  •  129 கி.மீ
  •  150 கி.மீ
  •  151 கி.மீ
  •  155 கி.மீ
  •  188 கி.மீ
  •  190 கி.மீ
  •  201 கி.மீ
  •  222 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago