ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஆலயம். திருப்பூந்துருத்தி (Thiruppoonthuruthi)

India / Tamil Nadu / Thiruvaivaru / Thiruppoonthuruthi
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

SCN011 - ஸ்ரீசுந்தரநாயகி சமேத ஸ்ரீபுஷ்பவனேஷ்வரர் ஆலயம் சோழ நாடு காவிரி தென்கரைத் தேவாரத் தலங்களுள் 11வது தலம். SST06 - சப்த ஸ்தானத் தலங்களுள் ஸ்ரீபுஷ்பவன நாதர் ஆலயம் ஆறாவது. AVT - பூந்துருத்தி காடவ நம்பிகளின் அவதாரத் தலம்.அப்பர் உழவாரத் தொண்டு செய்த தலமென்றெண்ணி, காலால் மிதிக்கவும் அஞ்சி வெளியில் நின்ற ஞானசம்பந்தருக்கு இறைவன் நந்தியை விலகச் செய்து காட்சித் தந்ததாகத் தலபுராணம் கூறுகிறது.
ஞானசம்பந்தரின் பல்லக்கை அப்பர் பெருமான் தன் தோளிற் சுமந்தத் தலம் இதுவே. "சம்பந்தர் மேடு" என்று அவ்விடம் அருகிலேயே இருக்கிறது. அப்பர் அமைத்த - "திங்களும் ஞாயிறும் தோயும் திருமடம்" என்று புகழப்படும் திருமடம் உள்ள தலம். இங்கு இருந்து தான் அப்பர் பெருமான் திரு அங்கமாலை உள்ளிட்ட பல தாண்டகங்களையும் பல பதிகங்களையும் பாடியருளினார். மக்கள் வழக்கில் ஸ்ரீ புஷ்பவனநாதர் கோவில்,திருப்பந்துருத்தி என வழங்கப்படுகிறது.மகிடனையழித்த பாவத்தைப் போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர் பெருமானும், பூந்துருத்தி காடவ நம்பியின் திருவுருவமும் தரிசிக்கச் சிறப்புடையன.
shaivam.org/siddhanta/sp/spt_p_punturutti.htm
temple.dinamalar.com/New.php?id=961
அமைவிடம்: திருக்கண்டியூரிலிருந்து 3 கி. மீ. தொலைவில், திருக்காட்டுப்பள்ளிச் சாலையில் உள்ள தலம். திருவையாற்றிலிருந்தும் செல்லலாம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  10°51'46"N   79°4'46"E
  •  171 கி.மீ
  •  211 கி.மீ
  •  275 கி.மீ
  •  339 கி.மீ
  •  407 கி.மீ
  •  440 கி.மீ
  •  464 கி.மீ
  •  468 கி.மீ
  •  481 கி.மீ
  •  566 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 8 years ago