ஸ்ரீகோவிந்தராஜ ஸ்வாமி ஆலயம், கீழ்திருப்பதி (திருப்பதி)

India / Andhra Pradesh / Tirupati / திருப்பதி
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

ஸ்ரீபுண்டரீகாக்ஷ வல்லி சமேத ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி ஆலயம், கீழ்திருப்பதி.PT Wealth - ஏழ்மை மற்றும் வறுமை நீங்க வணங்க வேண்டிய திருத்தலம். சைவப்பித்தன் கிருமி கண்ட சோழனால் கடலில் வீசியெறியப்பட்ட சித்திரகூடத்தின் அதாவது சிதம்பரத்தின் கோவிந்தராஜன் இவர்தான் என்கிறது ஸ்தல வரலாறு.ஸ்ரீராமானுஜரால் பிரதிஷ்டை பண்ணப் பட்டவர்.ஸ்ரீஆண்டாள், கோதா எனும் திருநாமத்தில் பெருமாள் சந்நிதிக்கு வலது புறத்தில் அழகுத் திருக்கோலத்தில் அருள் புரிகிறாள்.ஸ்ரீசக்கரத்தாழ்வார் கோபுரத்தின் உட்புறச் சுவரில் யந்திர ரூபமாக பிரதிஷ்டை பண்ணப்பட்டு உள்ளார்.பில்லி சூனியம் துஷ்ட சக்திகள் விலக வணங்கலாம்.
VPAT - ஸ்ரீவியாசராஜ தீர்த்தர் பிரதிஷ்டை பண்ணிய 732 ஆஞ்சநேயர் ஸ்தலங்களுள் ஒன்று.வலது அல்லது இடது வீரக்கரமும், மறு கரத்தில் சௌகந்திகா மலருடனும், இடையில் கத்தியுடனும் தலைக்கு மேல் இடம் அல்லது வலஞ்சுழியாக சுழற்றிய வாலில் மணியுடனும் ஒரே போல நின்ற கோலம்.ஸ்ரீமகாலக்ஷ்மியின் அருள் பெற்ற, விஜய நகர இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்த மகான் அந்நிய மதங்களின் கொடுமைகளில் இருந்து நமது ஹிந்து தர்மத்தைக் காக்க இந்த போற்றத்தக்க அற்புதமான செயலைச் சாதித்துள்ளார்.எனவே இவ்வாலயம் HRRT - இந்து மத மறுமலர்ச்சிக்காக வணங்க வேண்டிய திருத்தலம் ஆகும்.இவ்வாலயத்தில் அனேகமாக 3 வியாசராஜரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட ஆஞ்சநேய மூர்த்திகள் அருள் பாலிக்கிறார்கள்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°37'47"N   79°25'0"E
  •  81 கி.மீ
  •  322 கி.மீ
  •  464 கி.மீ
  •  496 கி.மீ
  •  545 கி.மீ
  •  577 கி.மீ
  •  608 கி.மீ
  •  851 கி.மீ
  •  871 கி.மீ
  •  1011 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 5 years ago