M.Kallupatti (ம.கல்லுப்பட்டி)

India / Tamil Nadu / Ponnamaravathi / Kallupatty - Marungapuri - Puthanatham
 village, hindu temple, public transport terminus

ம.கல்லுப்பட்டி அல்லது மருங்காபுரிகல்லுப்பட்டி , இந்திய மாநிலம் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டத்தில் உள்ள ஊராகும். முன்பு மணப்பாறை வட்டத்தில் இருந்த இவ்வூர் தற்பொழுது மணப்பாறையிலிருந்து பிரிக்கப்பட்ட மருங்காபுரி வட்டத்தில்,மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. ம.கல்லுப்பட்டி சுருக்கமாக கல்லை எனவும் அழைக்கப்படுகிறது.
திருச்சி மாவட்டம்,மருங்காபுரி வட்டம்,மணப்பாறை சட்டமன்றத் தொகுதி,கரூர் பாராளுமன்ற தொகுதியில் திருச்சி -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எண் NH-45Bல் திருச்சியிலிருந்து தெற்கில் 50கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கில் 80 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ம.கல்லுப்பட்டியானது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை NH-45Bல் அமைந்திருப்பதால் இது இதன் அருகில் உள்ள முக்கிய ஊர்களான டி.இடையபட்டி(ஊராட்சி) மற்றும் மருங்காபுரி (தாலுக்கா),துவரங்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு ம.கல்லுப்பட்டி நுழைவுவாயிலாகவும், மருங்காபுரி,வெட்டுக்காடு,மல்லிகைப்பட்டி,யாகபுரம்,குளவாய்பட்டி,டி.இடையபட்டி, நெல்லிப்பட்டி,டி.ஆண்டிப்பட்டி,சேத்துப்பட்டி,முத்தாழ்வார்பட்டி ஆகிய ஊர்கள் சந்திக்கும் சந்திப்பு முனையமாகவும் ம.கல்லுப்பட்டி('கல்லை')திகழ்கிறது.
இங்கு மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சி மன்றங்களுக்கான தலைமை அலுவலகமான

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
தோட்டக்கலைத்துறை அலுவலகம்
வேளாண்மைத்துறை அலுவலகம்,
கால்நடை மருந்தகம்,
வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம்,
துணை மின் அலுவலகம்,
துணை அஞ்சல் அலுவலகம்(621304)
ஆகிய அலுவலகங்கள் ம.கல்லுப்பட்டியில் அமைந்துள்ளன.மேலும்

மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகமும் ம.கல்லுப்பட்டியில் அமைக்கப்பட்டு 17.09.2013 முதல் செயல்பட்டு வருகிறது.
Nearby cities:
Coordinates:   10°25'39"N   78°26'6"E
This article was last modified 10 years ago