Sree Payarneeswarar Temple Tank (Udayarpalayam)

India / Tamil Nadu / Jayankondam / Udayarpalayam
 Upload a photo

Sri Payarneeswarar temple are the major attractions of the town and Ariyalur District.

ஆன்மிகப் பெருமை:

உடையார்பாளையம் நகரத்தில் பலகாலம் முந்தைய வரலாற்றுச் சின்னங்களும், தொன்மையான கோயில்கள் அமைந்திருப்பதால் வரலாற்று மற்றும் ஆன்மிக சுற்றுலாத் தலமாக உள்ளது. இவ்வூருக்குப் திருப்பத்ராரணியம், திருமுற்கபுரி, திருப்பயறணீச்சுரம் முதலிய பல பெயர்கள் உண்டு.

முன்பு, இவ்வூர் வழியே சென்ற வணிகன் ஒருவன் மிளகுக்கு அக்காலத்தில் அதிக வரி விதிக்கப்பட்டதால் அவற்றை பயிறு என்று பொய் கூறிக் குறைந்த வரி செலுத்திவிட்டுக் கொண்டு செல்ல, விருத்தாச்சலம் சென்று பார்க்கும் போது மிளகெல்லாம் பயிறாகியிருக்கவே, இத்தல சிவபெருமான், வணிகன் பொய் சொல்லிச் சென்றதற்கு அளித்த தண்டனை என்பதுணர்ந்து இங்கு வந்து வழிபட்டு முறையிட்டு இறையருளால் பயிறெல்லாம் மீண்டும் மிளகாக மாறப்பெற்றான். இதனாலேயே இத்தல இறைவனாருக்கு "பயறணி நாதர்" என்ற திருப்பெயரும், ஊருக்கு "பயறணீச்சுரம்" என்ற பெயரும் ஏற்பட்டன.

இங்கே உள்ள “சிறீ பயறணீசுவரர் ஆலயம்” தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்று. சுவாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசுவரர் எனவும் தமிழில் பயறணீநாதர் எனவும் மற்றும் அம்பிகையின் திருநாமம் தமிழில் நறுமலர்ப்பூங்குழல்நாயகி எனவும் வடமொழியில் சகுந்தளாம்பிகை எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் அரியலூர் மாவட்டத்தின் சுற்றுலா இடமாகும்.

இங்குள்ள வில்வளைத்த பிள்ளையார் அருச்சனனுக்கு காண்டீப வில்லை வளைத்துக் கொடுத்தவர் என்று ஐதீகம். இவர் திருக்கரத்தில் ஒரு வில் உள்ளது.
Nearby cities:
Coordinates:   11°11'30"N   79°17'35"E
This article was last modified 9 years ago