பால்வண்ண நாதர் ஆலயம்,கரிவலம் வந்த நல்லூர் (Karivalam vanda nallur)

India / Tamil Nadu / Sankarankoil / Karivalam vanda nallur
 ஒரு ஒளிப்படத்தை உள்ளிடுக

சிவபெருமானை க்ஷீரவர்ணேஸ்வரர், முகலிங்கநாதர் என்றும் அழைக்கிறார்கள். அம்பாளுக்கு அதுல சௌந்தரியாம்பிகை, ஒப்பனையம்பாள், ஒப்பிலாவல்லி என்ற பெயர்கள் உண்டு. அக்னி தலம் என்பதால், நம்மை நெருங்கும் தீமைகள் எல்லாம் சாம்பலாகிவிடுவதை உணர முடிகிறது. மாமுனி அகத்தியரும் இங்கே வந்து ஈசனை வழிபட்டிருக்கிறார்; ஸ்ரீசக்கர பராசக்தியை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அன்னைக்கு ஒரு மண்டலம் பூஜை நடத்தினால், மனம் குளிர்ந்த வாழ்வும், முகப்பொலிவும், அகப்பொலிவும் பெறுவார்கள்
இத்தலத்திற்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், சீவன் முக்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் என்று பல பெயர்கள் உண்டு. ஈசானமூலையில் மேலிருந்து புற்றொன்று தொங்கும் அதிசயத்தைக் காணலாம். இக்கோயிலில் எதை வேண்டி ஒரு மண்டல பூஜை நடத்தினால் போதும், கேட்ட வரம் கிடைக்கிறது என்கிறார்கள். குறிப்பாக, இழந்த பொருட்களை மீட்டுத்தரவல்லவர் இந்தப் பால்வண்ண நாதர்! மனநோய் உள்ளவர்களின் குறை தீர்கிறது. எச்செயலிலும் வெற்றி வேண்டுவோரின் பிரார்த்தனை பலிக்கிறது.
னெல்லை மாவட்ட பஞ்சபூதத் தலங்களுள் அக்னி ஸ்தலம்.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°16'11"N   77°32'27"E

கருத்துரைகள்

  •  58 கி.மீ
  •  74 கி.மீ
  •  95 கி.மீ
  •  109 கி.மீ
  •  116 கி.மீ
  •  174 கி.மீ
  •  198 கி.மீ
  •  211 கி.மீ
  •  214 கி.மீ
  •  219 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 7 years ago