sree kailAsanAthar temple,Musiri (Musiri)

India / Tamil Nadu / Madukkur / Musiri / madukur road
 temple, Shiva temple
 Upload a photo

மன்னார்குடி- மதுக்கூர் சாலையில் சென்று மதுக்கூரின் மேற்கில் ஒரு கிமி தூரத்தில் அமைந்துள்ள முசிறியை அடையலாம்.

தமிழகத்தில் பல ஊர்கள் முசிறி என அழைக்கப்படுகிறது. அதில் இந்த ஊரும் ஒன்று.


முசுகுந்த நாடு என்பது 32 கிராமங்களை உள்ளடக்கிய நாடகும்.முசிறி 32 நாடு என்பது இன்றும் சொல் வழக்காக உள்ளது.

இந்த 32 கிராமங்களிலும் வேளாண் பெருங்குடி மக்களாகிய வேளாளர்கள் .சோழநாட்டில் பட்டுக்கோட்டை பகுதியில் காடழிந்து நாடாகிய காலகட்டத்தில் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முசிறியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தை வழிபாட்டு தலைமையிடமாகக் கொண்டு முசுகுந்த நாடு அமைந்துள்ளது.

முசுகுந்த நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுக்கு என்று தனியாகக் கோயில் கட்டிக் கொண்டாலும் முசுகுந்த நாட்டு வேளாளர்கள் என்பதன் குறியீடாக முசிறி கைலாசநாதர் ஆலயம் அமைந்துள்ளது.


முசுகுந்த நாட்டில் உள்ள ஊர்கள்
1.அண்டமி 2.ஆலடிக்குமுனை 3.ஆலத்தூர்4.ஆலம்பள்ளம்
5.ஏனாதி 6.கட்டயங்காடு
7.கருப்பூர் 8. காசாங்காடு
9.கிரத்தூர் 10.கீழக்குறிச்சி
11. சிலம்பவேளாண்காடு 12.சிவந்தாம்பட்டி 13.சுந்தம்பட்டி14.சூரப்பள்ளம் 15.செங்கட்டகுத்தான்காடு 16.செம்பாலூர் 17.செண்டாங்காடு 18.தாமரங்கோட்டை 19.திட்டகுடி/காயங்காடு 20.நாட்டுச்சாலை 21.நெம்மேலி 22.பள்ளத்தூர் 23.பாளமுத்தி 24.புதுக்கோட்டைவள்ளூர் 25.புலவந்தி 26.மதுக்கூர்/சிராயகுடி 27.மட்டங்கால்28.மன்னங்காடு 29.மூத்தகுறிச்சி 30.வாட்டாகுடி 31.விக்ரமம் 32.வெண்டாக்கோட்டை

இப்பகுதியில் குடியேறிய வேளாளர்கள் தங்கள் நாட்டிற்கு முகுந்த நாடு என்று பெயரிட்டுக் கொண்டு தாங்கள் பரவிய 32 கிராமங்களை இணைத்து முசுகுந்த நாட்டு நிர்வாகத்தை கட்டியமைத்தனர்.இவர்களுக்கான பொதுக் குறியீடாக முசிறி கைலாசநாதர் ஆலயம் விளங்குகிறது.

பெரிய பரந்த திடலில் ஆலயம் அமைந்துள்ளது, மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

உயர்ந்த கொடிமரம் அதனை தாண்டி நந்தி மண்டபம்


இறைவன் கைலாசநாதர் பெரிய லிங்கமாக கிழக்கு நோக்கியும், அம்பிகை பெரியநாயகி தெற்கு நோக்கியும் உள்ளனர். பெரிய மண்டபம் இரு கருவறைகளையும் இணைக்கிறது.

பழமையான கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள்ளது. விநாயகர், முருகன் தனி கோயில் கொண்டுள்ளனர். நவக்கிரக மண்டபம் வட்ட வடிவ மண்டபமாக உள்ளது.

வடபுறம் பெரிய வில்வமரம் செழித்து வளர்ந்து நிற்கிறது.திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர் வழிபடவேண்டிய கோயில்
Nearby cities:
Coordinates:   10°29'53"N   79°22'7"E

Comments

  • Musiri located in Tiruchirapalli dist... In river of Cauvery...
  • vellalar temple
  • do you know anything about this chandramouleshwarar temple?
This article was last modified 6 years ago