Ramanathapuram

India / Tamil Nadu / Ramanathapuram /
 Upload a photo

Ramanathapuram District is an administrative district of Tamil Nadu state in southern India. The city of Ramanathapuram is the district headquarters.
Nearby cities:
Coordinates:   9°22'5"N   78°50'33"E

Comments

  • இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு இந்தியாவில் 60 வது சுதந்திரத்தைக் கொண்டாடுகின்ற இவ்வேளையில் இந்திய சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும், உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயத்தின் தியாகத்தை மறந்திருந்தாலும் மன்னித்திருக்கலாம்... ஆனால் பாவிகள் திட்டமிட்டே அல்லவா மறைத்திருக்கிறார்கள்! மாவீரன் திப்பு சுல்தான்: ''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து லி ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அஸ்வ குல்லா கான்: பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்தது... இல்லை மறைத்தது? வேலூர் சிப்பாய்க் கலகம்: சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்? மாவீரன் கான் சாஹிப்: மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம். மாப்பிளா மார்கள் போராட்டம்: 1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் (மறைத்தீர்கள்!) காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது. கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்? அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா? காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி: 1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர் (பர்மா, கிலாபாத், ஒத்துழையாமை) 2. மி.இ. முஹம்மது அப்துல் காதர் சாஹிபு ி தென்காசி (கிலாபத், அந்நியத் துணி எரிப்பு, ஒத்துழையாமை இயக்கம்) 3. அப்துல் ஹமீதுகான் 1932ல் சென்னை மேயராக பணியாற்றியவர் (சுதந்திரப் போராட்டத்திற்காக சென்னை சட்டசபையில் குரல் கொடுத்தார்.) 4. முகமதலி சேலம் (கள்ளுக்கடை மறியல்) 5. பி.என். அப்துல் கபீர் தாராபுரம் (வில்லுப்பாட்டு மூலம் தேசப் பற்றை வளர்த்தார், கிலாபத்திலும் கலந்து கொண்டார்) 6. பண்டிட் அப்துல் மஜீத் பளைக்குளம் (கிலாபத்) 7. கலிபுல்லாஹ் திருச்சி (கிலாபத்) 8. நூர்மல் சென்னை (பகத்சிங் படத்தை அடையில் வைத்து விற்றதாக கைது செய்யப்பட்டு, 18-1 அச்சு சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது.) 9. அப்துல் ஹமீது 10. மௌலானா அப்துல் காதர் 1973ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதில் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விபரம் வருமாறு: பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா இராஜகிரி அப்துல்லா இளையான்குடி கரீம் கனி திருப்பத்தூர் அபூபக்கர் திருப்பத்தூர் தாஜிதீன் அத்தியூத்து அபூபக்கர் பக்கரி பாளையம் அனுமன் கான் சென்னை அமீர் ஹம்சா சென்னை ஹமீது செங்குன்றம் கனி வண்ணாரப்பேட்டை ஹயாத்கான் புதுவலசை இபுராஹிம் பார்த்திபனூர் இபுராஹிம் வனரங்குடி இபுராஹிம் இளையான்குடி அப்துல் கபூர் மேலூர் அப்துல் ஹமீது சோழசக்கர நல்லூரி அப்துல் ஜப்பார் தத்தனனூர் அப்துல் காதர் பட்டுக்கோட்டை அப்துல் காதர் திருப்பூர் அப்துர் ரஜாக் காரிவிப்பட்டினம் அப்துல் மஜித் குருவம் பள்ளி அப்துல் மஜீத் கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம் ராம்நாடு அப்துல் வஹாப் மானாமதுரை அப்துல் பாசித் திரிவிடைச் சேரி அப்துல் வஹிப் அத்தியூத்து இபுராஹிம் ô சென்னை ஜாபர் ஹக்கிமி சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன் திருப்பத்தூர் காதர் பாட்ஷா புதுவலசை முஹம்மது லால் கான் பார்த்திபனூர் கச்சி மைதீன் தஞ்சை முஹம்மது தாவூது அறந்தாங்கி முஹம்மதுசெரிபு திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான் வடபழனி சென்னை முஹம்மது யூசுப் தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி சிவகங்கை முஹம்மது இபுராஹிம் சென்னை முஹம்மது உமர் மதுரை மொய்தீன் பிச்சை அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா திருப்பத்தூர் பீர் முஹம்மது கும்பகோணம் ரஹ்மத்துல்லா குடியத்தம் நஜீமுல்லாஹ் கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு இராமநாதபுரம் சையது கனி பரகப்பேட்டை தாஜிதீன் மன்னர்குடி சிக்கந்தர் கம்பம் சிக்கந்தர் முதுகுளத்தூர் சுல்தான் கும்பகோணம் சுல்தான் இராமநாதபுரம் தாஜிதீன்
  • mr.nasar please can i know about yourself because you have given a valuable news to all tamilians as well as roumor creating one side indians.thank you for your valuable news because am also from ramnad
  • assalamu alaikum hassan.how are u?thank u for ur appericiate.my native place is maraikayar pattinam, but working in uae.
  • தேசத் தந்தை காந்தியடிகளிடம் சுதந்திரம் என்றால் என்ன? என்று வினா எழுப்பிய போது, ஓர் இளம் பெண் நிறைய நகைகளை அணிந்து கொண்டு, நள்ளிரவில் இந்நாட்டின் தெருக்களில் பயமின்றி நடமாடக் கூடிய நிலைக்குப் பெயர்தான் சுதந்திரம் என்று சொன்னார். இப்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்கும் காந்தியடிகள் சொன்ன சுதந்திரத்திற்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன என்பதை தேசம் எண்ணிப் பார்க்க வேண்டும். 61வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களின் நடமாடும் சுதந்திரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குண்டு மனிதர்கள் வீதியில் உலாவரலாம் மனித குண்டுகள் தெருக்களில் சுற்றுவதாக வதந்தி பரப்பி னால், என்ன ஆகும். தூங்கும் சுதந்திரம் கூட தூக்கில் போடப்பட்டு விட்டது. வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்த வீரத் தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து, பெற்ற சுதந்திரத்தைப் பேணி காத்து பெரும் வல்லரசாய் நாட்டை உருவாக்க உறுதி பூண்டு இதய எழுச்சி யுடனும், மன மகிழ்ச்சியுடனும், முக மலர்ச்சியுடனும் கொண்டாடப்பட வேண்டிய சுதந்திரதினம் பயத்துட னும், பதற்றத்துடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும், மக்களை ஆக்குவது வேதனைக்குரியது. இதற்குத் தானா நமது விடுதலை வீரர்கள் இன்பங்களைத் துறந்தார்கள்? இன்னுயிரை ஈத்தார்கள்? ஆங்கிலேயரின் கொடிய சிறைகளில், தம் இனிய இளமையைப் பலியிட்ட நம் முன்னோர்கள், தங்களுக்குக் கிடைக்காத உரிமைகளும், நிம்மதியான வாழ்வும், தங்கள் சந்ததிகளுக்காவது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அந்த இலட்சியப் போரில் தங்கள் ஓருயிரையும் தந்தார்கள். நம் நாட்டின் சூழல், எஞ்சியிருக்கும் விடுதலைப் போராளிகளின் நிம்மதியையும் பறித்திருக்கிறது. விடுதலைக்குப் பிறகு தேனாறும், பாலாறும், தெருதோறும் ஓடும் என்றார்கள். குறைந்த பட்சம் ரத்த ஆறு ஓடாமல் இருந்தால், நிம்மதியாக இருக்கும். விடுதலைக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சி எப்படி இருக்கிறது? பல்வேறு துறைகளில் இலட்சிய உயரங்களை எட்டி இருக்கிறோம். அது பாராட்டுக் குரியது. அதே நேரம் வன்முறையின் வளர்ச்சி வேதனைக்குரியது. அண்ணல் காந்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தி இயந்திரத் துப்பாக்கி யால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் சிதறடிக்கப்பட்டார். அப்பாவி மக்களை சதிகாரக் குண்டுகள் சாகடித்துக் கொண்டி ருக்கின்றன. உண்மையான பயங்கரவாதிகளையும், பயங்கர வாதத்தின் வேரையும் கண்டறிந்து, அடியோடு களையெடுக்க வேண்டும் என்பது சாதாரண மக்களின் விருப்பம். ஆனால், பயங்கரவாதப் பழிகளை ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் மீதே சுமத்த வேண்டும் என்பது ஆதிக்க மதவெறியர்களுக்கும், அவர்களின் ஆயுதங்களாய் மாறிப்போன ஊடகங்களுக்கும் ஒரே நோக்கமாக உள்ளது. நாட்டிற்காக தியாகம் செய்த ஒரு சமுதாயத்தை தேசத் துரோகிகளாக சித்தரிக்கும் கொடுமை எந்த நாட்டிலும் இல்லை. சுதந்திரத்தைப் பற்றி ''நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவே இல்லை'' என்று எழுதினார் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியின் முன்னாள் மாணவர் அரங்கநாதன். அவன் ஒரு பட்டு வேட்டி பற்றிய கனாவில் இருந்த போது கட்டி இருந்த கோவணமும் களவாடப் பட்டது. என்ன தந்தது இந்த சுதந்திரம். அப்பனின் திருவோட்டை புத்திரனுக்கு இது புதுப்பித்துத் தந்தது'' லி என்கிறார் வைரமுத்து. அண்ணல் காந்தியே! நீ எங்கள் கையில் அட்சயப் பாத்திரத்தைத் தந்து சென்றாய், இப்போது எம் கையில் இருப்பதோ பிச்சைப் பாத்திரம்' இந்த மாற்றத்தை செய்த மந்திரவாதிகள் யார்? தேசத் தந்தையே, உனக்கு சேரிகள் பிடிக்குமென்பதால் தானா தேசத்தையே சேரியாக்கி விட்டார்கள், லி என்று கொதிக்கிறார்லிமு.மேத்தா... நாட்டில் பற்று வைப்பவர்களை விட நாட்டைப் பற்ற வைப்பவர்கள் நம் தலைவர்கள், - என்பது புதியவனின் குமுறல், சுதந்திரம் என்பது வெறும் சொல்லல்ல. அது ஓர் உன்னத இலட்சியம். தேசம் என்பது, மண்ணும், மலையும், கடலும், நதியும், காடும், மேடும் மட்டுமல்ல.. தேசம் என்றால் மக்கள். தேசப் பற்று என்றால், மக்களின் மீது கொள்ளும் அன்பு.
  • வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? வியாழன், 30 oct 2008 சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்), சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர் சோப், சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது. அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொல்லிப் பலவித வரதட்சணைகளை வாங்கிய பல மாப்பிள்ளைகள் பட்டினங்களில் இருந்தார்கள். சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்று, வியாபாரங்களைச் செய்து, பணம் சம்பாதித்தவர்களைக் கண்டவர்கள் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுந்துக் கொண்டதுதான் வளைகுடா நாடுகள். கால மாற்றங்கள் வந்ததால், வளைகுடா நாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வளைகுடாவுக்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள். வளைகுடா நாடு என்பதில் ஓரெழுத்தை மாற்றிச் சொன்னால், வலை குடா நாடு என்று பொருள் படும். ஆம்!. இது வெறும் வலயல்ல, சிலந்தி வலை. சிலந்திக்கு அதுதான் பலம் மற்றும் பலவீனம். ஊரில் இருப்பவர்கள், நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம். வளைகுடா நாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம். நம்முடைய உடல் இங்கு இருக்கும்; ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும். தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வளைகுடாவில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாகச் சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார். அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள். விடுமுறை காலம் முடிந்து வளைகுடா நாடு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும். விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள் அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில். படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் - குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த. என்ன வாழ்க்கை இது? அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும். குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில். பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள். கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில். என்ன கொடுமை? உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு. சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.
  • oruna enga ooru than best
  • the city which contains genius.......... the great ramnad.
  • sethu seemai
  • veeram velancha mannu
  • RAMNAD SINGAM-LA.
  • super place
  • A TERROR CITY
  • bharathinagar
  • the snow city,,,,,,,,,,,,,,,,,,,,!
  • ramnad il vasantha nagar il ulla gowtham gayathrinu oru ponna love pannra.
  • Chennai is a bad place. Tamil is useless language. Tamil peoples are bad and ........ Tamil Nadu is a bad state in India. Kerala is very good place in India. Credence Hospital, Ulloor, Trivandrum is a Very good hospital in India.
  • GOD HAS MADE EVERYTHING BEAUTIFUL IN HIS TIME, FOR US.
  • i like this place
  • My place...
  • Show all comments