ஸ்ரீவடபத்ரசாய் ஆலயம், ஸ்ரீவில்லிபுத்தூர்

India / Tamil Nadu / Srivilliputtur /
 கோவில், திருமால் கோவில், Mahavishnu (en), திவ்ய தேசங்கள்

PNDD099, DD099 - ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீவடபத்ரசாயி ஆலயம்,திருவில்லிபுத்தூர் உட்பிரிவு-பாண்டியநாடு, 99வது திவ்யதேசம்.ஸ்ரீரெங்கமன்னார் ஆலயம் என்றாலும் கோதையின் பெயரால் ஸ்ரீஆண்டாள் கோவில் என்றே அறியப்படுகிறது.தீர்த்தம்:திருமுக்குளம், கண்ணாடித்தீர்த்தம்,விமானம் : விமலாக்ருதி விமானம்.ஸ்ரீ என்றால் லட்சுமி. இவளே ஆண்டாளாக அவதாரம் எடுத்தாள். வில்லி என்பது இவ்வூரை ஆண்ட மன்னன் பெயர். பாம்பு புற்று நிறைந்திருந்த பகுதியாக இருந்தது என்பதால் "புத்தூர்' என்றும் பெயர் வந்தது.AvrT - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாம் ஸ்ரீ ஆண்டாள், அவள் தந்தை ஸ்ரீபெரியாழ்வார் (விஷ்ணு சித்தர்) ஆகியோர் அவதார தலம்.PT Family integration - குடும்பத்தில் அமைதி/மகிழ்ச்சி நிலவ வணங்க வேண்டிய தலம்,ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது.
ஆலயச்சிறப்பு:
இத்தலத்தினுடைய கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது. இங்குள்ள உற்சவர் பெருமாள் கால்சராய், சட்டை அணிந்தே காட்சி தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பும் அணிந்திருப்பது விசேஷம். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபட்டால் கீர்த்தி உண்டாகும் என்பர். எனவே, ஸ்ரீஆண்டாள் அன்னையை வேண்டிக்கொள்பவை அனைத்தும் நடக்கும் என்பர்.பகவானை ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார்.அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்."கோதை பிறந்த ஊர்', "கோவிந்தன் வாழும் ஊர்'.ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுத்த "பெரியாழ்வார்' தன் மகளை பிரிந்த ஆற்றாமை மிகுதியால், ""ஒருமகள் தன்னையுடையேன் உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்'' என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் வடவிருசத்தினடியில் அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி அடிவருட சயனக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறு "விட்ட வாசல் பிரகார"மும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபடதிறந்து வைக்கப் படுகின்றன. இக்கோயில் தேரில் மிகச் சிறத்த தொழில் நுட்பத்துடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சாலி வாகன சகாப்தம் கொல்லம் 1025 வருஷம் சௌமிய வருடம் ஆவணி 13 குருவாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இதன் பழமையை புரிந்து கொள்ள முடிகிறதா??
Sri Andal-Rangamannar, Vadabadrasaayi Temples - Srivilliputhur[Divya Desam 99]
www.dinamalar.com/koil/26_virudhu_andalkoil.asp and
www.trsiyengar.com/id236.shtml
Location: மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிறைய பஸ்கள் உள்ளன.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் tawp.in/r/2rbh
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  9°30'31"N   77°37'52"E
  •  68 கி.மீ
  •  84 கி.மீ
  •  87 கி.மீ
  •  135 கி.மீ
  •  136 கி.மீ
  •  171 கி.மீ
  •  187 கி.மீ
  •  192 கி.மீ
  •  199 கி.மீ
  •  201 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago