ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயம், குடந்தைக்காரோணம் (Кумбаконам)

India / Tamil Nadu / Kumbakonam / Кумбаконам / 80 SARANGABANI SOUTH STREET
 Shiva temple (en), thevara paadal petra sthalam (en)

SCN028 - ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசிக்கேசர் ஆலயம், திருக்குடந்தை காரோணம் சோழநாடு காவிரி தென்கரைத் தேவாரத்தலங்களுள் 28வது தலம்.MMT - மகாமகம் தலவரலாறுடன் தொடர்பு கொண்ட தலம், கும்பத்தின் உறி(சிக்கம் - சிக்கேசம்) விழுந்த இடம் இது.அம்பிகை இறைவனின் திருமேனியை ஆரோகணித்த காரணத்தால் இத்தலம் காரோணம் என்று அழைக்கப்படுகின்றது.

shaivam.org/siddhanta/sp/spt_p_kudandaik_karonam.htm
temple.dinamalar.com/New.php?id=366
Location: ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தின் அருகே அமைந்துள்ளது.
இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது. சாரங்கபாணி கோயிலின் தெற்கில் மதில் சுவற்றினை ஒட்டி அமைந்துள்ளது.சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது.
இறைவன், இறைவி : சோமேஸ்வரர், தேனார் மொழியாள்.
இக்கோயில் கிழக்கு முகமாக அமைந்தது. ஐந்து நிலைகள் கொண்டது அதனை தாண்டி கொடிமரமும் நந்தியும் உள்ளன. அதன் வடக்கில் மாலீசர் சன்னதியும் மங்களாம்பிகையும் மேற்கு நோக்கி உள்ளனர். அருகில் கல்யாண விநாயகர் உள்ளார். .ஒருமுறை திருமால் இத்தலத்தில் வந்து சோமேசுவரரை ஓராண்டு காலம் பூசித்துவந்தார். அதன் பயனாக அசுரர்களை அழிக்கும் வல்லமையும் பெற்றார். அவ்வாறு மாலுக்கு அருள் செய்த ஈசன் பெயர் மாலீசர். ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்தால் மாலீசரையும் மங்களாம்பிகையையும் தரிசிக்கலாம்.

சோமனின் சாபம் தீர்த்த சிவன்
சோமன் எனப்படும் சந்திரனுக்கு பிரகஸ்பதியால் ஒரு சாபம் ஏற்பட்டது. அச்சாபம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை (சந்திர புட்கரணி) உண்டாக்கி இறைவனை வழிபட்டான். இறைவன் அவனது சாபத்தை நீக்கி அருளினார். அதனால் இறைவனுக்குச் சோமேசர் என்ற பெயர் வழங்கலாயிற்று.
Nearby cities:
Koordinater:   10°57'32"N   79°22'29"E
  •  398 km
Array
This article was last modified 7 years ago