Koothur Sivan Temple

India / Tamil Nadu / Tirukkattuppalli / Kallanai - Poompuhar State Highway (SH-22)
 Shiva temple  Add category
 Upload a photo

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், கூத்தூர் சிவன்கோயில்.
சில்லென்ற காவிரிக்கரை சாலை , திருக்காட்டுப்பள்ளி 4 கிமி என வழிகாட்டிபலகை சொல்ல, கூத்தூர் என மற்றொரு பலகை சொல்ல கூத்தூர் தர்மசாஸ்தா கோயிலுக்கு வடக்கில் செல்லும் சாலையில் வண்டியை திருப்பினேன்.
இந்த தர்மசாஸ்தா கோயிலும் சிறப்பானது தான்.
சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயங்கள் ஏராளம். சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் தவிர கிராம தெய்வமாக கருதப்படும் அய்யனார் என்னும் தர்மசாஸ்தா ஆலயங்களும் சோழர்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு ஆலயம்தான் கூத்தூரில் உள்ள தர்மசாஸ்தா ஆலயம்
நடனபுரி என்று அழைக்கப்பட்ட இந்த கூத்தூரில் கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது.

இங்கு இறைவன் நாராயணேஸ்வரர், இறைவி அதலாம்பிகை

அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென

பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் முதலாவது அதலம்

ஏழுலகங்கள் என்பன அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாலம்.

இந்த வெள்ளி மாயமான அதல உலகத்தின் தேவியாக இருப்பவர் இந்த அம்பிகை அதனால் தான் இங்கு இறைவிக்கு அதலாம்பிகை என பெயர். இவ்வுலகை தண்டம் ஏந்தி காப்பவர் திருமால் என சொல்லப்படுகிறது அதனால் அவர் வழிபட்ட ஈசனுக்கு நாராயண ஈஸ்வரர் என பெயர். இறைவன் கிழக்கு நோக்குகிறார், இறைவி தெற்கு நோக்கி உள்ளார்.
இறைவன் எதிரில் ஒரு நந்தியும் இறைவியின் எதிரில் ஒரு நந்தியும் இருக்கின்றன. பிரகாரத்தில் சன்னதிகள் ஏதுமில்லை, கோட்டத்திலும் தெய்வங்கள் ஏதுமில்லை, கருவறை வாயிலில் சித்தி விநாயகர், தண்டாயுதபாணி யும் உள்ளனர். கருவறை வெளியில் மண்டபத்தினை ஒட்டியபடி சனீஸ்வரர் மட்டும் உள்ளார்.

ஒரு கால பூஜை மட்டும் நடை பெறுகிறது.
Nearby cities:
Coordinates:   10°52'13"N   78°58'25"E
This article was last modified 5 years ago