Mahadevapattinam sivan temple

India / Tamil Nadu / Mannargudi / SH-146 : Mannargudy – Pattukkottai - Sethubava chatram Road
 Shiva temple  Add category
 Upload a photo

ராஜமன்னார்குடி எனப்படும் மன்னார்குடியில் இருந்து தெற்கு நோக்கி பட்டுக்கோட்டை செல்லும் சாலை யில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளிக்கோட்டை உள்ளது இதன் மேற்கில் ஒரு கிமி தூரத்தில் உள்ளது மகாதேவபட்டினம்.

இங்கு ஒரு பெரிய மராட்டியர் கால கோட்டை உள்ளது- ( அதன் கதையை பிறகு பார்ப்போம் )

பல கோயில்கள் இக்கோட்டையை சுற்றி உள்ளன, அதில் மூன்றுசிவன் கோயில்கள் அடக்கம். அதில் ஒன்று தான் நாம் இப்போது பார்ப்பது.

இது விஸ்வநாதர் - விசாலாட்சி கோயில். ஒற்றை கருவறை கொண்ட கோயில் இறைவன் சிறிய லிங்க மூர்த்தி, அவரது வாயில் அருகில் விநாயகர், முருகன் உள்ளனர்.அதே சன்னதிக்குள் ஒரு மாடத்தில் விசாலாட்சி, அடுத்த மாடத்தில் சண்டேசர். முகப்பு மண்டபத்தில் நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளார்.

சிறிய கோயில்தான் இருந்தும் பராமரிப்பில்லை, இ.ச.அற. நிலைய துறை கோயில் தான். சம்பளமில்லை, உதவியில்லை, எல்லா கேள்விகளுக்கும் இங்கே இல்லை பதில் தான்.

பல சிரமங்கள் இருப்பினும், இக்கோயிலில் ஒரு சிவாச்சாரியார் பூசையை விடாமல் தொடர்ந்து நடத்துகிறார்.

அவர் பெயர் சுந்தரம் குருக்கள் - இவர் நமது கோயில் திரு.செல்வகணேசன் அவர்களின் உறவினர் என்பது அங்கு சென்றபோது தெரிந்தது.

கோயில் விமானத்தினை சுற்றி அரசு முளைத்து விரிசல் கண்டுள்ளது அருகாமையில் உள்ள அல்லது ஐந்தாறுபேர் கொண்ட ஒரு உழவார பணிக்குழு இதனை தூய்மை செய்ய வேண்டுகிறேன்.
Nearby cities:
Coordinates:   10°36'8"N   79°24'28"E
This article was last modified 6 years ago