Kalanjeri sivan temple (Kalanjeri)

India / Tamil Nadu / Ammapettai / Kalanjeri / papanasam- saliyamangalam road
 Shiva temple  Add category
 Upload a photo

பாபநாசம்- சாலியமங்கல சாலையில் உள்ள வெண்ணாற்றின் தென் கரையில் உள்ளது இந்த சிறிய கிராமம்.
கிழக்கு நோக்கிய ஓர் சிவாலயம் அக்கிரகார தெருவின் முன்புறம் உள்ளது. இக்கோயில் தரை தளம் ஆற்றின் கரைக்கு ஈடாக உயர்ந்து காணப்படுகிறது. கிழக்கில் மொட்டை கோபுரமும், தென்புறம் ஓர் வாயிலும் உள்ளன.


இறைவன் விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் அம்பிகை காமாட்சியம்மன் தென்புறம் நோக்கியும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், முருகன் ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன.

இங்கு அறுபது மாணாக்கர்கள் படிக்கும் ஓர் வேதபாடசாலை உள்ளது. மேலும் 150ஏக்கர்கள் கொண்ட
"களஞ்சேரி ரிஷி க்ருஷி" வேத விவசாய பண்ணை ஒன்றும் உள்ளது.

இயற்க்கை முறை விவசாய முறையில் விவசாயம் செய்து ரசயான கலப்பு இல்லாத சுத்தமான அரிசி விற்பனைக்கு கிடைக்கும்.
Nearby cities:
Coordinates:   10°48'51"N   79°16'5"E
This article was last modified 6 years ago