Mattiyanthidal sivan temple

India / Tamil Nadu / Papanasam / Saliyamangalam, papanasam road
 temple, Shiva temple
 Upload a photo

பாபநாசம்- திருக்கருகாவூர் சாலையில் ஐந்து கிமி தூரத்தில் உள்ளது இந்த மட்டியாந்திடல். இங்கு கிழக்கு நோக்கிய பெரியதொரு சிவாலயம் உள்ளது. மல்லிகை திடல் என இருந்து பின்னர் திரிந்திருக்கலாம்.


திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்தலங்களில் ஒன்று இந்த ஊர்.

மற்றவை திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.

இறைவன் அருணாச்சலேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு செப்பு கொடிமரமும், கோயிலின் எதிரில் ஒரு நன்கு கட்டப்பட்ட படித்துறை கொண்ட குளமும் உள்ளது.

மூன்று நிலை ராஜகோபுரம் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் தென்மேற்கில் பெருமாள் உள்ளது புதிது. வடகிழக்கில் தென் முகம் நோக்கிய பைரவரும் நவகிரகங்களும் உள்ளன.

கோயில் முழுமையாக நகரத்தாரின் திருப்பணியாக காட்சியளிக்கிறது. பணிகள் மட்டுமல்லாது. கோயிலின் நிர்வாக பொறுப்பும் அவர்களே செய்து வருகின்றனர்.
Nearby cities:
Coordinates:   10°53'47"N   79°16'7"E
This article was last modified 8 years ago