முடிகொண்டநல்லூர் சிவன் கோயில்-Mudikondanallur sivan temple

India / Tamil Nadu / Vaithiswarankoil / Thriuchempalli- thalaichngaadu rosd

செம்பனார்கோயில்- திருசெம்பள்ளி- முடிகண்டநல்லூர் என வரவேண்டும்.

பாண்டியனது முடியினை சோழர்கள் வெற்றிகொண்டதனால் முடிகொண்டசோழ நல்லூர் என சில ஊர்கள் உருவாக்கப்பட்டன. இதே பெயருடைய ஊர் கொள்ளிட கரையில் உள்ளது.

அரை ஏக்கர் பரப்புடைய கோயில், வாயில் சுதைவேலைகளை கொண்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளார். விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், பெருமாள், மகாலட்சுமி என வரிசையாய் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி உள்ளனர். பைரவர், சூரியன் ஐயனார்,சிலைகள் உள்ளன. அம்பிகை அருகில் நடராஜரும் சிவகாமியும் சுதைவடிவில் உள்ளனர்.

ஒருகால பூசையில் மட்டும் வழிபாடு உள்ளது.

இறைவன்- திருகுழம்பீஸ்வரர்
இறைவி- அமிர்தவல்லி
Nearby cities:
Coordinates:   11°7'3"N   79°45'27"E
This article was last modified 8 years ago