Kiliyanur Sivan Temple (Kiliyanur)

India / Tamil Nadu / Mayiladuthurai / Kiliyanur / பெருஞ்சேரி சாலை
 temple, Shiva temple

மங்கை நல்லூர் - திருவிளையாட்டம் சாலையில் எட்டு கிமி தூரத்தில் உள்ள எடகுடி பேருந்து நிறுத்தம் அருகில் வீரசோழன் ஆற்றினை கடந்தால் கிளியனூர்.

இவ்வூரின் கிழக்கில் உள்ளது கோயில் கிளியனூர் எனும் சிற்றூர்.

இங்கு உள்ள கோயில் சமீபத்தில் பாடல் கிடைத்த 276வது பாடல்பெற்ற கிளியன்னவூர் கோயில் இது தான் என கூறுகின்றனர். ஆனால் விழுப்புரம் அருகில் உள்ள கிளியனூர் தான் அது எனவும் கருத்துக்கள் உள்ளன.
இக்கோயிலும் பழமையானது என்பதில் ஐயமில்லை ஆனால் இது பாடல் பெற்றதல்ல.

கிழக்கு நோக்கிய கோயில் அம்பிகை கோயில் தெற்கு நோக்கி உள்ளது. கருவறை இடைநாழி,முகப்பு மண்டபம், மகா மண்டபம் என உள்ளது. மகா மண்டபம் கூம்பு வடிவ த்தில் உள்ளதால் இதன் கட்டுமான வயது இருநூறு ஆண்டுகள் இருக்கலாம். இறைவன் அக்னீஸ்வரர் அழகிய நடுத்தரமான அளவுள்ள லிங்கமாக உள்ளார். அம்பிகைஆனந்தவல்லி உருவும் நடுத்தர அளவுடையதாய் உள்ளது.

முகப்பு மண்டபத்தின் நுழைவாயிலில் இரு சுதை துவாரபாலகர்கள் உள்ளனர். மகாமண்டப தென்புறம் ஆதி துர்க்கையும் கணபதியும் உள்ளனர். மகாமண்டப வடபுறம் முருகன் வள்ளி தெய்வானையுடனும், ஆதி ஆனந்தவல்லி உள்ளனர்.மேற்கு பார்த்து பைரவர், சூரியன் உள்ளனர்.

பிரகாரத்தில் ஆங்காங்கே மணல் முட்டுகள் கொட்டப்பட்டுள்ளன. விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. சண்டேசர் சன்னதி முகப்பு மண்டபத்துடன் பெரிய அளவில் உள்ளது எதிரில் சிவ துர்க்கை உள்ளார். காலை மாலை என இரு கால பூசைகள் நடைபெறுகின்றன.
இறைவன் அக்னீஸ்வரர் இறைவி- ஆனந்த வள்ளி
Nearby cities:
Coordinates:   11°2'38"N   79°41'13"E
This article was last modified 8 years ago