பூங்குளம்

India / Tamil Nadu / Vikramasingapuram /

பூங்குளத்தில் பிறக்கிறாள் தாமிரபரணி.
பொதிகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வரும் தாமிரபரணி, தமிழகத்தின் பூங்குளம் இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளத்தில் வெளியே தெரிகிறது. குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால் இதனை பூங்குளம் என்று அழைக்கிறார்கள். இதுதான் தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது
பொதிகை மலையிலிருந்து உருவாகி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் முதலிய புண்ணிய தீர்த்தங்களைக் கடந்து பாபநாசம் என்ற சிவ ஸ்தலத்தின் வழியாக வருகிறது தாமிரபரணி.
பொதிகை மலையில் தோன்றி வங்கக்கடலில் கலக்கும் இந்த நதி 70 மைல் நீளமுடையது.
தாமிரபரணி ஒரு வற்றாத ஜீவநதி .
இது பொதிகை மலையில் உள்ள மூலிகைகளின் நற்குணங்களையும் கொண்டுள்ளது.
'தன் பொருநை' என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது.
இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  8°36'36"N   77°15'15"E
  •  46 கி.மீ
  •  47 கி.மீ
  •  87 கி.மீ
  •  94 கி.மீ
  •  175 கி.மீ
  •  202 கி.மீ
  •  232 கி.மீ
  •  250 கி.மீ
  •  283 கி.மீ
  •  293 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 4 years ago