KNT02 thirumuruganpooNdi, sree muruganAtha swAmy temple, திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி! (திருமுருகன் பூண்டி)

India / Tamil Nadu / Avanashi / திருமுருகன் பூண்டி
 கோவில், சிவன் கோயில், தேவாரத் திருத்தலங்கள்

வேதம் ஓதி வெண்ணீறு பூசிவெண் கோவணந் தற்றயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்திர நீர்மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும்முரு கன்பூண்டி மாநகர்வாய்
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கிருந்தீர் எம்பெருமானீரே -சுந்தரர்.

முருகனால் பிரதிஷ்டை செய்து வணங்கப்பட்டதால், திருமுருகநாதர் என்ற திருப்பெயரில் அழைக்கப் படுகிறார்! வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) 'கூப்பிடுவிநாயகர்' அவிநாசிக்கு போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.
இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி சுவாமியை மன முருகி வேண்டிக்கொள்ள மனநோய்(சித்தபிரம்மை) சாபங்கள், பாவங்கள் நீங்கும்!தீர்த்தக்கரையில் நாகபிரதிஷ்டை செய்து வணங்குகின்றனர்.சண்முகதீர்த்தத்தில் நீராடி சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என நம்பப்படுகிறது.
துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மர (குருக்கத்தி மர)த்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்டு பின் திருப்பித் தந்த திருத் தலம்!செல்வம் இழந்து வாடிய நிலையிலும் செல்வம் கிடைக்கப் பெற்று மகிழ்ந்த நிலையிலுமாய் சுந்தரரின் இரண்டு திருவுருவங்களையும் சந்நிதி பிராகாரத்தில் கண்டு உய்யலாம்!

temple.dinamalar.com/New.php?id=830

பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது; avinAsi (KNT01), neelakaNdi and kooppidu vinAyagar temples are also near to this temple!
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  11°9'49"N   77°18'40"E
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 13 years ago