J.PRABHU

India / Tamil Nadu / Nagapattinam /
 Upload a photo

இனியவளே!
உயிருள்ளவரை
என்னால்
நிறுத்தமுடியாத
விஷயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று
காற்றை சுவாசிப்பது....
இரண்டு
உன்னை நேசிப்பது....

04
மௌனம்...!




தீ கக்கும் எரிமலையில்
அவலங்கள் எனக்கு கேட்கவில்லை
நீர் பொங்கும் அலைகளின்
ஓசையும் எனக்கு கேட்கவில்லை

பனிமலைகள் உடைகின்ற
சத்தம் கூட கேட்கவில்லை
தனிமையில் புன்னகைக்காய்
உன் இதழ் பிரியும் ஓசை மட்டும்
திரிவடைந்து என்
காதுகளைச் செவிடாக்குகின்றதே!!


டு



.

05
என் உயிர் வாழ்கிறது உன்னோடு




என் உயிர் காதலியே !
என் ஆயுள் வரை நீ
என்னோடு வாழ்வாய் என்று
நம்பி என் உயிரை உயிலாக
எழுதி தந்துவிட்டேன் உன்னிடம்

ஆனாலும் என் ஆயுள்
வரை நீ என்னோடு
வாழ்வாயா என்று உன்னிடம்
கேட்க மறந்துவிட்டேன்

ஆதலால் தானோ காலம்
கடந்த பின் பெண்கள் உடை
மாற்றுவது போன்று
நீயும் என் காதலை
மாற்றி சென்றுவிட்டாய்

உயிராக நம்பி இருந்தேன்
உன்னை உயிரை பிரித்து
இதயத்தை உரித்து நீ
ஏமாற்றி சென்றுவிட்டாய்

என்னை இதயம் துடிக்கிறது
சுவாசம் கிடைக்கவில்லை
உடல் வாழ்கிறது உயிர்
உள்ள ஜீவன்
இருப்பதாக தெரியவில்லை

உயிரின் உணர்வு இன்றி
ஊமையான உடல்
கொண்ட வாழ்க்கை
இன்னும் எத்தனை
நாளைக்கோ? புரியவில்லை

என் மரணம் வந்து என்
உயிரை எங்கே
தேடபோகிறதோ தெரியவில்லை.
மனம் மாறிப்போன மல்லிகை மலரே!
என் மரணத்துக்கு சொல்லி வை
என் உயிர் இருப்பது
உன்னோடுதான் என்று.

06
காதல் கவிதை
என்னவளே




என்னவளே
நீ வருவாய் என
கதவை திறந்து பார்த்து
தென்னை மரத்தை
நீ என நினைத்து

உன் பெயரை கூவியழைத்தேன்
டொக் என்று தேங்காய் விழும்
சத்தம் கேட்டு திடுக்கிட்டேன்
அப்போது நினைத்தேன்

உன் பெயரை கேட்டு தென்னைக்கு
சந்தோசம் வந்து விட்டது என்று.


07
காதல் கவிதை
காத்திருப்பு.




பள்ளிப் பருவத்தில்
பனிதூவும் வேளையில்
பாவைநீ வருகையிலே
பாவிநான் பார்ப்பதற்கு ஏங்குவேன்.

பதினெட்டுக்கடந்து எனை
பதிவோடு பற்றுவாயென
பைங்கிளியே பகல்கனவில்
காத்திருந்தேன் தினமும்.

பார்த்துப் பார்த்து என் விழி
பலமிழந்து போனதடி.
நீ பணமென்னும் மாயையால்
என்னை பரிதவிக்கவிட்டாயடி.

இத்தனையும் எழுதுகிறேன்
நீ என்னை புரிவதற்காகவல்ல
இருப்பவர்களை நீ புரிவதற்கு

08
ஏனையவை
எங்கே......?




எங்கே................?

நான் என்ன
அவதார மனிதனா?
பூமி பிழந்து
புறப்பட்டு வந்தவனா?
ஏனிந்தக் கொடுமை..?
எனக்கு..!
ஏனிந்தக் கொடுமை?

சாக்கடைச் சருகாய்
சிறகிழந்த சிட்டாய்
இணை இழந்த செருப்பாய்
தேடுவார் இன்றித்
தனிமையில் நான்

அம்மா அப்பா
அண்ணன் தங்கை
உடன் பிறப்பு உறவுகள் எங்கே?
மாமா மச்சான்
சித்தா சித்தி
சுற்றம் சூழ எல்லாம் எங்கே..?

சிறைகளிலா..?
சித்திரவதை முகாம்களிலா...?
இடம் பெயர்ந்தனரா ..?
புலம் பெயர்ந்தனரா..?
யுத்தம்தான் தின்றதா?
எங்கே ..? எங்கே..?
என் கேள்விக்குப் பதில்
தான் எங்கே....?

09
காதல் கவிதை
காதல் தீ எரியுதே!




ஓடிவந்துள்ளமதை உத்தமரே
அணைத்தென்ன
உடல்சிலிர்க்க ஒருமுத்தம்
ஊருறங்கத் தந்ததென்ன
நாடிமலர்மேனியிடை
நடுங்கவே இழைந்தென்ன
நாணமே இன்றியென்

நல்மனதைக்கெடுத்ததென்ன
ஆடிவரும் தேனே
அழகுச்சிலை அமுதே
அன்பேயென் றாயிரமாய்
அழைத்துமகிழ்தென்ன
கூடிக்கிடந் தென்னை
குலவிகளித்தபின்னர்
கோதையிவள் வாடவிட்டு
குடிபோனதெங்கையா

ஆவின்சிறு கன்றலைந்து
அன்பில் கதறுவதாய்
அங்கே கிளையிருந்து
அணையுமிரு குருவியொலி
மாவின்மேல் துள்ளும்
அணில் மறைந்து களிக்குமொலி

மலர்மீது வண்டூதி
மதுவில் திளைக்குமொலி
தாவியெனை வாடவைத்து
தாகமிட செய்யுதையோ
தலையிருந்து கால்கள்வரை

தணலாய் கொதிக்குதையோ
நாவிருந்து வேதனையில்
நானே விடுத்தஒலி
நங்கையிவள் பாடலொலி
நாடியுனைச் சேராதோ

வானவில்லின் ஏழுநிறம்
வண்ணம் வெளுத்திருக்கே
வட்டநிலா பொட்டல்வெளி
வரண்டமண் திட்டாயும்
தேன்மலரில் வாசமிலை

தென்றல் தொடக் கூதலில்லை
தின்னவெனக் கனிபிழியத்
திகட்டிக் கசக்குதய்யோ
கூன் விழுந்தகோலமென்று
கொள்ளா நடைதளர


குழந்தையதுமழலை
சொலக் கோவமெழுந்தேபரவ
ஏன் இதுவும் வேண்டியதோ
இன்னல்தான் நான்படவோ
ஏழையிவள் தான்கொதித்து
எரிமலையாய் சிதைவதுவோ

10.
காதல் கவிதை
நீ வருவாயென..




உன்னோடு கடந்த நாட்கள்
உனக்காக தவமிருக்கிறது
உன்னினைவுகளின் ஸ்பரிசங்களுடன்
உயிர்பெறும் நாளுக்காக

எம் காதல் லீலையில் வெட்கித்து
எதிரொலித்த வண்ண நிலவும்
எட்டிநின்ற தென்றல் காற்றும்
எப்பொழுதும் வினவுகிறது

உணராத உஸ்ணங்களை
உணர்த்தி விட்டு சென்றதனால்
உயிர்பெற்ற நாடிகள்
உறங்க மறுக்கிறது

காதலின் ஆத்மீகம் கண்டதில்
காலமெல்லாம் தவிக்கின்ற
காதலியாகி கனிந்திருக்கிறேன்
காவுகொள்ள நீ வருவாயென.

11
Nearby cities:
Coordinates:   10°47'48"N   79°50'56"E
This article was last modified 15 years ago