அருங்காட்சியக வளாகம் (சென்னை) | அருங்காட்சியகம்

India / Tamil Nadu / Madras / சென்னை

அருங்காட்சியக வளாகம் சுமார் இருபது ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. விலங்குக் காட்சி சாலையும் முதலில் இங்குதான் இருந்தது. பின்னர் அது மூர்மார்க்கெட் அருகில் இருந்த My lady's பூங்காவுக்கும் பின்னர் அங்கிருந்து வண்டலூருக்கும் மாற்றப்பட்டது. தற்போது அது உயிரியல் பூங்கா என அழைக்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்டுப் பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் பொருட்கள் எழும்பூர் அருங்காட்சியகத்திலேயே தொடர்ந்து இருப்பதால் செத்த காலேஜ் எனச் சென்னை மக்களால் அன்புடன் அழைக்கப்படுவது இந்த அருங்காட்சியகம் தான். இந்த வளாகத்திற்குள்தான் கன்னிமாரா பொது நூலகம், தமிழ் வளர்ச்சித் துறை, காவிரி தீர்ப்பாய அலுவலகம், தொல்லியல் துறை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. தொல்லியல், மானிடவியல், விலங்கியல், புவியியல், தாவரவியல், படிமக் கூடம், சிறுவர் அருங்காட்சியகம், தேசியக் கலைக்கூடம், வளர்கலைக் கூடம் உட்பட பல பிரிவுகளிலும் பல கட்டடங்களிலும் அருங்காட்சியகம் இங்கு செயல்படுகிறது.
அருகிலுள்ள நகரங்கள்:
ஆயத்தொலைவுகள்:  13°4'15"N   80°15'22"E
  •  29 கி.மீ
  •  369 கி.மீ
  •  481 கி.மீ
  •  565 கி.மீ
  •  611 கி.மீ
  •  619 கி.மீ
  •  646 கி.மீ
  •  917 கி.மீ
  •  922 கி.மீ
  •  1005 கி.மீ
கடைசியாக இந்தக் கட்டுரையில் மாற்றம் செய்யப்பட்ட நாள் 11 years ago